பக்கம்:தேன்மழை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 58 "பதிபக்திப் பாட்டெழுதல் எளிது; காதற் பாட்டெழுதிக் காட்டுவதே கடினம்' என்றே அதவத்துர் புதுமதியன் கூற, ஆங்கே அமர்ந்திருந்த திருத்தக்கன் அவனை நோக்கி 'மதிமிக்கோன் சாதிப்பான் எதையும், அன்னோன் மாற்றாரின் புத்தகத்தாற் பிழைக்க மாட்டான்; எதிர்நிற்பான்; வென்றாரை வெல்வான் என்றான்; "எழுதுவிரோ நீர்?' என்றான்; "இயலும்" என்றான். முதலடியைத் தேனாக்கி, அடுத்த டுத்து முளைக்கின்ற தொடரடியை அமுத மாக்கி விதவிதமாய்ச் சந்தநய நட்புண் டாக்கி வியப்புமிகு உவமைகளால் புதுமை தேக்கிப் பதமுடைய பாவினமாம் விருத்த மாக்கிப் பதின்மூன்றி லம்பகமாய் வகுத்துத் துரக்கி, இதயமதை இறைவன்பால் பதிய வைத்தோன் இன்பச்சிந் தாமணிநூல் இயற்ற லானான். நரிவிருத்தம் பாடியவன்; முற்றக் கற்ற நற்கவிஞன், தக்கதிருத் தக்க தேவன் விரிவிருத்தக் காப்பியத்தைத் தமிழ்ச்சங் கத்தில் வைத்திட்டான், தைத்திங்கள் தொடங்கும்நாளில்! ஒருதிருத்தங் காணுதற்கும் வழியே இல்லா உயர்நூலை, மன்றத்தார் மெச்ச லானார். தரைதிருத்தி நாடாண்ட பாண்டி வேந்தன், சாகாத நூல்தந்த கவியை நோக்கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/60&oldid=926875" இலிருந்து மீள்விக்கப்பட்டது