பக்கம்:தேன்மழை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 80 மதிமிகுத்தோர் தமைமதிக்கும் மன்னா நின்னை வரிவேங்கை கொல்லவரின் உடனே என்றன் சதைகொடுத்துச் சாவேனே யன்றி உம்மைச் சத்தியமாய்ச் சாகவிடேன். கோட்டைச் செந்நெல் விதைகிடைத்தால் காப்பாற்ற வேண்டு மன்றி வேகவைத்தால் விளைவேது? என்றன் கண்ணர் நதிநிறுத்த நினைக்கின்றீர் உமது மூச்சை நான்நிறுத்திப் போவதற்கோ இங்கு வந்தேன். கண்ணமைந்த முரசொலியோ காதங் கேட்கும் கருமுகிலின் ஒசைபல காதங் கேட்கும் மண்ணமைந்த மத்தளத்தில் இருகை வைத்து மத்துமத்தென் றேவோசை எழுப்பு வோரும் பண்ணமைந்த யாழெடுத்து மீட்டு வ்ோரும் பாவலரும் நினைப்புகழ்ந்து பேசும் ஒசை விண்ணமைந்த வையமெலாம் விரைந்து கேட்கும் வேந்தேயான் வருகின்றேன் என்றான் சென்றான். (மூலம் : புறநானூறு - 164)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/83&oldid=926898" இலிருந்து மீள்விக்கப்பட்டது