பக்கம்:தேன் சிட்டு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழலோசை

43


 "யார் தலையிலே கட்டிக் கொண்டு போகிறார்கள்? ஏதோ உயிரோடு இருக்கிற வரையிலும் எல்லோரோடும் சமமாக இருந்து எல்லாரும் சந்தோசப் படும்படி செய்தால் அதுதான் நல்லது" என்று அவர் கூறினார்.

மாட்டுக்காரப் பையன் மாடுகளை யெல்லாம் தன்னுடையதாக நினைத்திருப்பதின் ரகசியம் இப்பொழுதுதான் எனக்குப் புலனாயிற்று.

பண்ணைக்காரர் படித்தவரல்ல. கையெழுத்துப் போடக்கூட அவருக்குத் தெரியாதென்று பின்னால் தெரிய வந்தது. ஆனால் அவர் வாழ்க்கையின் ரகசியத் தைக் கண்டுகொண்டிருக்கிறார்.

"உங்கள் பண்ணையிலே பட்டி பெருகவேனும்; பால்பானை பொங்க வேணும். உங்களைப்போல ஆயிரம் ஆயிரம் பண்ணைக்காரர்கள் தோன்ற வேணும்" என்று கூறிவிட்டு நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டேன்.

இன்று பொங்கல் திருநாள். மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனுடைய குழலோசையும் பண்ணைக் காரருடைய அன்புச் சொற்களும் இன்பம் பொங்க என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/44&oldid=1147629" இலிருந்து மீள்விக்கப்பட்டது