பக்கம்:தேவநேயம் 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

112 தேவநேயம் தேவநேயம் பாவாணர் காட்டியுள்ள சொல்லியல் நெறிமுறைகள் சில ‘முதல் தாய்மொழி' என்னும் தம் நூலுக்குப் பாவாணர், 'தமிழாக்க விளக்கம்' என்னும் பெயரையும் இணைத்தே எழுதினார். அதன், சுட்டொலிக் காண்டச் சுட்டொலி வளர்ச்சிப் படல இறுதியில், “உலகியல் நிகழ்ச்சிகளையெல்லாம் ஊன்றிக் கவனித்து, சுட்டுக் கருத்துக்களோடு அவற்றைத் தொடர்பு படுத்தி, உள நூற்கு ஒப்பவும் ஏரண நூற்கு இசையவும் இயற்கையுண்மை எள்ளளவும் தப்பாது, எல்லாக் கருத்துக்களையும் குறிக்கும் சொற்களை ஆக்கிக் கொண்ட முன்னைத் தமிழரின் நுண்மாண் நுழைபுலம் என்னே!” என்று வியந்து எழுதுகிறார். பல்லாயிர ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர்கள், இவ்வாறு சொல்லை ஆக்கிக் கொண்டனர் என்பதைத் தேவநேயர் கண்டு கொண்ட அருமை இருக்கிறதே அது, 'அவர் தம் நுண்மாண் நுழைபுலம் என்னே!' என்று நம்மை வியப்பில் ஆழ்த்தவே செய்கின் றது! ஏனெனில், தடமே அறிவரா அடர் கானில், தன்னந்தனியே சென்று, புதையல் இடங்கண்டு தடமமைத்துக் காட்டிய சீர்மை ஒத்த அது, முந்தைப் படைப்பாளியின் படைப்புச் சீர்மை ஒப்பதாம். ஊகாரச் சுட்டுக் கருத்து வளர்ச்சியை அவர் காட்டும் முறை: ஊகாரச் சுட்டு, முதலாவது முன்மையைக் குறிக்கும். முன்மை என்பது, காலமுன், இடமுன், முன்னிலை, முன் னுறுப்பு: முற்பகுதி, முனி (நுனி) முதலிய பல கருத்துக்களைத் தழுவும். முன்மைக் கருத்தினின்று முன்வருதலாகிய தோன்றற் கருத்துப் பிறக்கும். வித்தினின்று முளையும், மரத்தினின்று துளிரும், தாயினின்று சேயும் போல, எப்பொருளும் ஒன்றினின்றே தோன்றுதலானும்; குட்டியும் குழவியும் முகமும் முன்னுங்காட்டியல்லது புறமும் பின்னும் காட்டித் தோன்றாமையானும்; எப்பொருட்கும் முற்பகுதி முகம் எனப்படுதலானும்; முகத்திற்கு எதிர்ப்பட்ட பக்கம் முன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/129&oldid=1431479" இலிருந்து மீள்விக்கப்பட்டது