பக்கம்:தேவநேயம் 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் நெறிமுறை யாதலானும்; புதிதாய் ஒன்றினின்று ஒன்று தோன்றுதலெல்லாம் முன்வருதலே யாதல் அறிக. பாவாணர் 113 தோன்றக் கருத்தினின்று முற்படற் கருத்துப் பிறக்கும். ஒரு மரத்தில் தோன்றிய தளிர் முன்னால் நீண்டு வளர்வதும், ஓர் உடம்பில் தோன்றிய உறுப்பும் கொப்புளமும் முன்னுக்குத் தள்ளியும் புடைத்தும் வருவதும், இவை போல்வன பிறவும், முற்படலாகும். முற்படற் கருத்தினின்று முற்செலவுக் கருத்துப் பிறக்கும். இடம் பெயரும் இருதிணை யுயிரிகளும் ஓரிடத்தினின்று இன்னோ ரிடத்திற்குச் செல்வதெல்லாம் முற்செலவே, பிற்செல வெல்லாம் பெரும்பாலும் உயிரிகள் சிறிது வளர்ச்சியுற்ற பின்பும் குறுந்தொலை விற்கும் வேண்டுமென்றே நிகழ்த்தப் பெறுவதால், இயற்கையான செலவெல்லாம் பொதுவாக முற்செலவென்றே யறிக. கீழிருந்து மேற்செல்வதும் ஒருவகை முற்செலவாதலின், முற்செலவு என்பது எழுதல் அல்லது உயர்தலையும் தழுவும். முற்செலவுக் கருத்தினின்று நெருங்கற் கருத்துப் பிறக்கும். ஒரு மரக்கிளை நீண்டு வளர்ந்து இன்னொரு கிளையை அடுப்பதும் இருதிணையியங்கு உயிரிகளும் முன்சென்று தாம் தாம் விரும்பும் இடத்தையும் பொருளையும் கிட்டுவதும் நெருங்கலாகும். நெருங்குதற் கருத்தினின்று தொடுதற் கருத்துப் பிறக்கும். ஒரு பொருள் எத்திசையினும் மேன்மேல் சென்றுகொண்டே யிருப்பின் ஏதேனுமொரு பொருளைத் தொட்டே தீரல் வேண்டும். முன் னோக்கிச் செல்லும் உயிரிகளும் தாம் விரும்பிய பொருளையும் இடத்தையும் தொட்டடையும். தொடுதல் என்பது, மெலிதாய்த் தொடுதல்,வலிதாய்த் தொடுதல் என இருபாற்பட்டு, தீண்டுதல், தழுவுதல், முட்டுதல், குத்துதல், உறைத்தல் முதலிய பல கருத்துக் களைத் தழுவும். தொடுதற் கருத்தினின்று கூடற்கருத்துப் பிறக்கும். கூடல் என்பது, ஒன்றிய கூடல் ஒன்றாக் கூடல் என இருவகை. மண்ணொடு மண்ணும்,நீரொடு நீரும் கூடுவது ஒன்றிய கூடல். உடலொடு உடலும் கூலத்தொடு கூலமும் கூடுவது ஒன்றாக் கூடல். ஒன்றாக் கூடல் மீண்டும் தொட்டுக் கூடல் தொடாது கூடல் என இரு திறத்தது. கூடற் கருத்தினின்று வளைதற் கருத்துப் பிறக்கும். ஒன்றாக் கூடலில் சில பொருள்கள் வளைவதுண்டு. ஒன்றை ஒன்று முட்டிய இரு பொருள்கள் ஒன்றாதவையாயின் அவற்றுள் மெலியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/130&oldid=1431480" இலிருந்து மீள்விக்கப்பட்டது