பக்கம்:தேவநேயம் 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னோட்ட மடல் பாவாணர் 125 களைப் பாவாணர் அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். Confidence என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் எதுவும் பாவாணர் அவர்களின் நூலின் இதுவரை எனக்குக் கிட்டவில்லை. ஆயின் சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியில் Confidence = பற்றுறுதி எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதை, அந் நண்பரின் வேண்டுகோளின்படி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் திரு செல்லப்பர்க்கு எழுதித் தெரிவித்துள்ளேன். தமிழ்ச் சிக்கல் பலவற்றைத் தீர்க்க அத்தகைய நூலொன்று மிகவும் பயன்படும். பாவாணர் அவர்களின் நூல்கள் விரைவில் நாட்டுடைமை யாக்கப் படலாம். அதன் பின்னர் அந்நூல்களை வெளியிடவும், கட்டுரைகளைத் திரட்டி வெளியிடவும் பாவாணர் அவர்களின் ஆய்வு குறித்த நூல்களையும் அவர்கள்தம் கொள்கைக்கு அரண் செய்யும் நூல்களையும் வெளியிடவும் 'பாவாணர் தமிழ் நூற் பதிப்புக் கழகம்' என்னும் ஓரமைப்பை உருவாக்குதல் நலம் என்றும் முதல் நூலை வெளியிடுதற்கு ஆகும். செலவாகிய உரூபா 5000-ஐ பாவாணர் அன்பர்களிடம் திரட்டிக் கொள்வதெனவும் அதனை விற்றுக் கிடைக்கும் தொகையால் பிற நூல்களை வரிசையாக வெளியிடலாம் என்றும் எண்ணினேன். அவ்வமைப்பின் வரைவு (Draft)ஒன்றையும் எழுதினேன். தங்களையும், பர். இரா. இளவரசர், பர், பொற்கோ ஆகிய மூவரையும் அறிவுரைக் குழுவாகக் குறித்தேன், என்னை அதன் அமைப்பாளராகக் குறித்தேன். அவ்வரைவுப் படியை இரா. இளவரசர்க்கு அனுப்பி பர். பொற்கோவிடமும் காட்டிக் கருத்துரைக்குமாறு அனுப்பினேன். இன்றுவரை விடை யில்லை, வந்த அவ்வரைவுப் படியைத் தங்களுக்கு அனுப்புவேன், அவ்வரைவின் சுருக்கமாய்த் தங்கள் மடல் கருத்தேந்தி வந்தமை பெரிதும் மகிழ்ச்சி யூட்டுகின்றது. கிறித்துப் பிறப்பையொட்டிக் குழந்தைகட்கு விடுமுறை யிருக்குமாதலால் அவ்வமயம் பெரும்பாலும் ஊருக்குவருவேன், வருங்கால் தங்களைக் காண்பேன். பிறபின் இன்னணம், அன்புடன், கு. பூங்காவனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/142&oldid=1431494" இலிருந்து மீள்விக்கப்பட்டது