பக்கம்:தேவநேயம் 1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

124 - தேவநேயம் தேவநேயம் தேவநேய முன்னோட்ட மடல் ஒன்று கு. பூங்காவனம், 8 பெட்டிக்ரு தெரு, பெங்க ளூர் - 560 001 திபி. 2013 நளி 25 (11.12.82) அன்பார்ந்த ஐயா வணக்கம். தலம். தலமே சூழ்க. தங்கள் அன்பான மடல் வந்தது. தங்கள் மடலில் கண்ட கருத்துகள் நான் எண்ணியவாறே அமைந் தமையால் பெரிதும் மகிழ்ந்தேன். பாவாணர் அவர்களின் படைப்புகளில் உள்ள சொல்லாய்வை அகரவரிசையில் வெளியிட வேண்டும் என்று தாங்கள் எண்ணியவாறே நானும் ஓராண்டுக்கு முன்னர் எண்ணினேன். முதற்பணியாக அவர்கள் தம் நூல்களில் ஆங்கில, வடமொழி, பிறமொழிச் சொற்கட்கிணையாகப் பயன் படுத்தப்பட்டுள்ள சொற்களைத் திரட்டியுள்ளேன். 'தமிழர் திருமணம்' 'பழந்தமிழர் விளையாட்டுகள்' போன்ற சில நூல்கள் எனக்குக் கிடைக்கவில்லை. கட்டுரைகள் சிலவும் பயன்பட்டன. இன்னும் பல கட்டுரைகளைத் தேடித் திரட்டவேண்டும். இப்போதே அச் சொற்களின் அளவு முந்நூறு பக்கக் குறிப்பேட்டின் முழுமை! ஓய்விருப்பின், இருகிழமை சென்னைக்குச் சென்று தங்கினால் அப்பணி முழுமையடையும். பிற பணிகளிலிருந்து விடுவித்துக் கொண்டு அப்பணியை முழுமையுறச் செய்யவியலாது உள்ளது. பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கருத்தரங் கொன்றில் Hope, Faieth, Belief, Confidence, Trust ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தனித்தமிழ்ச் சொற்கள் இல்லை என்று கருத்துரைக்கப் பட்டதாம். இதனை எம் நண்பர் ஒருவர் எனக்குக் கூறி அவற்றிற்குரிய தமிழ்ச் சொற்கள் இலவா என வினவினார், பாவாணர் அவர்கள் பயன்படுத்திய சொற் களை நான் தொகத்து வைத்திருந்தமையால் அவற்றிற்குரிய தமிழ்ச் சொற்களை என்னால் தரமுடிந்தது. Hope = நம்பிக்கை ; Faith = நம்பகம்; உட்கோள்; Belief = நம்பிக்கை ; Trust = கையடை Trustee = கையடைஞர் ஆகிய சொற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/141&oldid=1431493" இலிருந்து மீள்விக்கப்பட்டது