பக்கம்:தேவநேயம் 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியல் நெறிமுறை முரிதல் - முறிதல் பார் - பாறை ‘ல்’ - ‘ர்’ ஆகும். குடல்- குடர் பந்தல்-பந்தர். ‘வ்’ - ‘க்’ ஆகும். சிவப்பு - சிகப்பு ஆவா-ஆகா பாவாணர் மானியம். வுகர வீறு சுகர வீறாதல்: பரவு - பரசு; விரவு - விரசு. அணம், இயம் - விகுதிகள்: கட்டணம், ஏரணம்; கண்ணியம், 123 ழகரம் டகரமாகத் திரியும். புழல் - புடல், குழல் - குடல். ழ - ண ஆதல்: தழல் - தணல்; நிழல் - நிணல். ளகர மெய் பல சொற்களில் யகர மெய் ஈறாகத் திரியும். தொள் - தொய்; பொள் - பொய். வள் - வய் - வை = கூர்மை. ழ - க = போலி. மழவு - மகவு: தொழுதி - தொகுதி. இவ்வாறு பல்வேறு நெறிமுறைகளைச் சுட்டிக் காட்டியும் கருத்தில் கொண்டும் வேர்ச்சொல் விளக்கங்களைக் கண்டு காட்டுகிறார் பாவாணர். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்பது பண்டு தொட்டுப் பயிலவரும் ஒரு மரபு. அதனால் தகுதியமைந்த எந்த இலக்கியமும் பின்னவர்களால் இலக்கண மரபாக ஏற்றுப் போற்றப்பட்டுவருதல் கண்கூடு. அவ்வகையில் பாவாணர் வேர்ச்சொல் ஆய்வு வழியே ‘சொல்லியல் நெறி முறை' யாதலை, ஆழ்ந்து கற்பார் அமைத்துக் கொள்வார் என அமைவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/140&oldid=1431492" இலிருந்து மீள்விக்கப்பட்டது