பக்கம்:தேவநேயம் 1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தேவநேயம் குரங்கு - குரங்குதல், குரவை = வளைதல் குரங்கு - குறங்கு = கொக்கி. குறங்கு - கறங்கு = சுழலுதல் குழு என்னும் வேரினின்றே குழாம், குழுமம் முதலிய தொகுதிப் பெயர்கள் தோன்றின. குழு = சிறு கூட்டம் குழூஉ= தொழிற் குலம் அல்லது கூட்டம் குழாம் = குழுவிலும் சற்றுப் பெரிய கூட்டம் குழுமம், குழுவல் = குழாத்திலும் பெரிய கூட்டம் குழும்பு = தோழமைக் கூட்டம். 'ட'கரம் 'ர'கர மாகத் திரியும் திரிவுமுறை படவர்-பரவர் தேவநேயம் எ-டு: விடிச்சி - விரிச்சி. 'த'கரம் சகாரமாகத் திரிதல்: அத்தன் - அச்சன்; நத்து - நச்சு, மம் - ஒரு தொழிற்பெயர் ஈறு. எ-டு: உருமம்,பருமம். உருத்தல் = வெப்பமாதல். உருமம் = வெப்பமான நண்பகல். மம் ஈறு மையீற்றுத் திரிபென்று கொள்ள இடமுண்டு. ஓ, நோ: செய்யாமை - செய்யாமல். ம் - வ் ஆகும்: அம்மை - அவ்வை: செம்மை - செவ்வை; அமை - அவை. ம் - ன் ஆகும்: அம்மை - அன்னை; நிலம் - நிலன். மு- மி - ஆதல்: முழா - மிழா; முண்டு - மிண்டு; முறை - மிறை ‘ர்’ - 'ற்' ஆகும் ஒளிர் - ஒளிறு; முரி - முறி. ரகரத்தின் வல் வடிவம் றகரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/139&oldid=1431491" இலிருந்து மீள்விக்கப்பட்டது