பக்கம்:தேவநேயம் 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் (எழுத்தும் சொல்லும் சொல்லுறுப்பும் குறியும்) 1. எழுத்து அ' a. பெ. n. தமிழ் நெடுங்கணக்கின் முதலெழுத்து; first letter of the Tamil alphabet. வகை: உயிர்க்குறில்; short vowel. சொல்வகை: அங்காத்தலால் ஒரு மாத்திரை யளவொலிக்கும் அஃறிணைச் செவிப்புலப் பொருளாகிய தற்சுட்டொலிப் பெயர். வேற்றுமைப்பாடு: 2ஆம் வகை, 3ஆம் பிரிவு. எ-டு: அவ்வை , அவ்வால், அவ்விற்கு, அவ்வின், அவ்வது, அவ்வில், 2. சொல் அ' a. பெ. n. 1. அழகு; beauty. "அவ்வாய் வளர்பிறை சூடி" (பெரும்பாண். 412), 2. சிவன்; Siva. "ஆரு மறியா ரகார மவனென்று" (திருமந். 1751); 3. திருமால்; Vishnu "அவ்வென் சொற்பொரு ளாவான்" (பாகவ. சிசுபா. 20), 4. நான்முகன்; Brahma, (தக்கயாகப். 65, உரை ), 5. சுக்கு ; dried ginger. (பரி. அக.) 6. திப்பிலி; long pepper. (பரி, அக) அ' a. பெ. எ, adj. புறச்சுட்டு; demon. prefix: அ = அந்த, 1. சேய்மைச் சுட்டு ; pref. to nouns, expressing remoteness. எ-டு: அப் பையன். 2. முற்பெயர்ச் சுட்டு ; pref. to nouns, refering to their antecedents. எ-டு: பண்டைத் தமிழகத்தை ஆண்டவர் சேர சோழ பாண்டியர், அம் மூவேந்தரும் இன்றில்லை . 3. உலகறி சுட்டு; pref. expressing world-wide eminence. 'அத்தம் பெருமான்.' (சீவக. 221) 3. சொல்லுறுப்பு (இ; ind) அ' a. அகச்சுட்டு; demon, base: முதனிலை - 1. சேய்மைச் சுட்டு; base of the dem, pron, expressing the remote person or thing. எ-டு: அவன், அங்கு, அன்று. 2. முற்பெயர்ச்சுட்டு; base of the dem. pron, referring to its antecedent. எ-டு: ஓரூரில் ஓரரசன் இருந்தான். அவனுக்கு இரு மக்கள். 3. உலகறி சுட்டு; base of

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/146&oldid=1431632" இலிருந்து மீள்விக்கப்பட்டது