பக்கம்:தேவநேயம் 1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்தியர் பாவாணர் 141 அகத்தியர் பெயரான அங்குட்டன் என்பதையும், பெருவிரலின் பெயரான அங்குட்டன் என்பதையும், ஒன்றாய் மயக்கி, அகத்தியர் அங்குட்ட (பெருவிரல்) அளவினர் என்று பழைமையர் கூற நேர்ந்திருக்கலாம். (5) மாநிலத்தைச் சமனாக்கியது பனிமலை ஒரு காலத்தில் நீர்க்கீழிருந்து பின்பு வெளித் தோன்றி யது. அகத்தியர் தெற்கே வந்தபின், குமரிநாட்டைக் கடல் கொண்டது. முற்காலத்தில் முறையே தாழ்ந்தும் உயர்ந்துமிருந்த வடதென் நிலப்பாகங்கள், பிற்காலத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் போயின. இவ் விரண்டையும் இணைத்து, அகத்தியர் தாழ்ந்தும் உயர்ந்துமிருந்த வடதென் நிலப்பாகங்களைச் சமப்படுத்தின ரென்றும், வடபாகம் அமிழ்ந்ததற்குக் காரணம் நிலத்திற்குப் பாரமாகுமாறு பதினெண் கணத்தவர் வந்து கூடிய சிவபெருமான் கலியாணமென்றும் கதைகட்டினர் பழைமையர். (6) தமிழை உண்டாக்கினது தமிழ் மிகப் பழைமையானதாதலாலும், பிற்காலத் தமிழர்க்குச் சரித்திரவறிவின்மையாலும், இதுபோது அறியப்படுகின்ற தமிழ் நூல்களுள் அகத்தியம் முன்னதாதலாலும், அகத்தியர் தலைக் கழகத்திறுதியில் வந்தவராதலாலும் அகத்தியர் தமிழை உண்டாக்கினர் என்று சிலர் கருதலாயினர். அகத்தியம் வழிநூலாதல் அகத்தியம் தமிழிலக்கண முதனூலென்று, இதுவரையும் கூறப்பட்டு வந்தது. இற்றையாராய்ச்சியால் அது வழி நூலே யென்பது தெள்ளத்தெளியத் தெரிகின்றது. அகத்தியம் வழிநூல் என்பதற்குக் காரணங்கள் (1) தொல்காப்பியத்தில் ஓரிடத்தும் அகத்தியம் கூறவும் சுட்டவும் படாமை. (2) "என்ப”, “என்மனார் புலவர்”, “என மொழிப்”, “என்றிசி னோரே” என்று தொல்காப்பியர் முன்னூலாசிரியரைப் பல்லோ ராகக் குறித்தல். (3) களவினுங் கற்பினுங் கலக்க மில்லாத் தலைவனுந் தலைவியும் பிரிந்த காலைக் கையறு துயரமொடு காட்சிக் கவாவி எவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப் டாடப் படுவோன் பதியொடு நாட்டோடு முள்ளுறுத் திறினே யுயர்கழி யாணந்தப் பையு ளென்று பழித்தனர் புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/158&oldid=1431648" இலிருந்து மீள்விக்கப்பட்டது