பக்கம்:தேவநேயம் 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

142 தேவநேயம் அகத்தியர் என்று அகத்தியர் முன்னோர் மொழிபொருளை எடுத்தோதுதல். சிலர் ஆனந்தக் குற்றம் பிற்காலத்துத் தோன்றியதென்று கூறுவர். அது தவறாகும். கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்தமும் புறத். 19) என்று ஆனந்தப் பெயர் தொல்காப்பியத்திற் கூறப்படுதல் காண்க. ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் டெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையா னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன் என்று அகத்தியர் தமக்கு முந்தின இரு நூலாசிரியரை விதந்துங் கூறினர். அகத்தியத்திற்குமுன், இந்திரன் என்றொரு புலவன் இயற்றிய ஐந்திரம் என்னும் இலக்கணம் இருந்தமை, மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்த தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றி என்று தொல்காப்பியப் பாயிரத்திற் கூறியதா லறியலாம். “ஏழியன் முறையது” என்னும் அகத்திய நூற்பாவில் குறிக்கப் பட்ட இரு நூல்களையும் முறையே வடமொழி இலக்கண நூல்களாகிய பாணினீயமும் ஐந்திரமுமெனக் கொண்டனர் பல்லோர். இது தமிழின் தொன்மையை அறியாமையால் நேர்ந்த தவறாகும். பாணினி கி.மு. 5ஆம் நூற்றாண்டினரா யிருக்க, அவரியற்றிய இலக்கணம் எங்ஙனம் இராமர் காலத்தவரான அகத்தியர் நூலுக்கு முதனூலாதல் செல்லும்? "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று தொல்காப்பியர் சிறப்பிக்கப்படுவதால், ஐந்திரம் மிக விழுமிய நூலென்பது பெறப் படும். இந்திரன் மருதநிலத்துப் பண்டைத் தமிழ்த் தெய்வமாத லின், ஐந்திரம் அதன் சிறப்புப் பற்றியும் நூலாசிரியன் பெயரொப் புமைபற்றியும் அத் தெய்வத்தினதாகக் கூறப்பட்டது. இறைய னார் அகப்பொருள் அதன் நூலாசிரியன் பெயரொப்புமை பற்றியும், கோயிற் பீடத்தடியிற் கிடந்தமை பற்றியும், சிவபெருமா னியற்றியதாகக் கருதப்பட்டமை காண்க, இந்திரனுக்குப் பண்டைத் தமிழ்ப்பெயர் வேந்தன் என்பது, இந்திரத் தெய்வத் திற்குப் பண்டைத் தமிழ்நாட்டிலிருந்த பெருமையைச் சிலப்பதி காரத்தானும் மணிமேகலையானு முணர்க. தமிழில் 8 வேற்றுமையும் ஒரே காலத்தில் தோன்றினவை யல்ல. முதலாவது 5 அல்லது 6 வேற்றுமைகள்தாம் தோன்றியிருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/159&oldid=1431649" இலிருந்து மீள்விக்கப்பட்டது