பக்கம்:தேவநேயம் 1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்தியர் பாவாணர் 143 முடியும். இறுதியில் தோன்றினது எட்டாம் வேற்றுமை. அது ஒரு காலத்தில் முதல் வேற்றுமையின் வேறுபாடென்று அதனுள் அடக்கப்பட்டது. இதையே, ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் டெயரது விகாரமென் றோதிய புலவனு முளன் என்பது குறிக்கும். ஆங்கிலத்திலும் விளிவேற்றுமையை முதல் வேற்றுமையின் வேறுபாடு (Nominative of Address) என்றே கூறுவர். ஐந்திர இலக்கணத்தில், விளிவேற்றுமை முன்னூல்களிற் போல முதல் வேற்றுமையில் அடக்கப்படாது, தனி வேற்றுமையாகக் கூறப்பட்டது. இதையே, “இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்” என்று கூறினர் அகத்தியர். (4) அகத்தியம் முத்தமிழிலக்கணமாதல் ஒரு மொழியில், முதன்முத லிலக்கணம் தோன்றும்போது, கூடிய பக்கம் எழுத்து சொல் யாப்பு என்ற மூன்றுக்கே தோன்றும். அகத்தியத்தில் இம் மூன்றுடன் பொருளிலக்கணமும், அதன் மேலும் இசை நாடக விலக்கணங்களும் கூறப்பட்டிருத்தலின், அது முதனூலாயிருக்க முடியாதென்பது தேற்றம். அகத்தியத்திற்கு ஆரியவிலக்கணத் தொடர்பின்மை அகத்தியம் வடமொழி யிலக்கண நூல்கட்கு மிகமிக முந்தியதா தலானும், தமிழிலக்கணத்திலுள்ள குறியீடுகளெல்லாம் செந்தமிழ்ச் சொற்களே யாதலானும், வடமொழி யிலக்கணத்தி லில்லாத சில சொல்லமைதிகளும் பொருளிலக்கணமும் இசை நாடகவிலக் கணமும் தமிழிலுண்மையானும், ஆரியர் இந்தியாவிற்குள் புகு முன்பே திராவிடர் தலைசிறந்த நாகரிகம் அடைந்திருந்தமை யானும், அகத்தியத்திற்கும் வடமொழியிலக்கணங்கட்கும் எட்டுணையும் இயைபின் றென்க. ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன்கேட் டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க என்று புத்தமித்திரன் கூறியது, தமிழ்நாட்டிற் பௌத்தத்தைச் சிறப்பித்தற்குக் கூறிய புனைந்துரையே யாகும். அகத்தியர் காலம் இனி, "அவரும் (அகத்தியர்) தென்றிசைக்கட் போதுகின்றவர்... துவராபதிப் போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் கோடி வேளிருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/160&oldid=1431650" இலிருந்து மீள்விக்கப்பட்டது