பக்கம்:தேவநேயம் 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

166 தேவநேயம் அதிகாரிகளின் அமாத்தம் வழங்கும் சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலம் அறுபது குடும்பு களையும், கொண்டிருந்தன. தேர்தலதிகாரி, குறித்த நாளில், சிறுவருட்பட ஊரிலுள்ள மக்களை யெல்லாம், சபைமண்டபத்தில் அல்லது கோயில் மண்டபத்தில் கூட்டுவன். புதிய ஆளுங்கணத்தில் உறுப்பினராயிருந்து வாரியஞ் செய்தற்கு ஒவ்வொரு குடும்பாரும், ஊரின் அளவிற்கும் நிலைமைக்கும் தக்கபடி, ஒருவரையோ பலரையோ, ஒரு தடவைக் கொருவராக, குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.) தேர்தல் தொடங்குமுன், அரசாணைத் திருமுகத்திலுள்ள தேர்தல் விதிகள் அனைவர்க்கும் படித்துக்காட்டப் பெறும் என்று தெரிகின்றது. அவ் விதிகள், தேர்தல் நடைபெறவேண்டிய முறையும், வாரியத்திற்குத் தக்கார் தகாதார் யார் யார் என்பதும், புதிய ஆளுங்கணத்தின் வாரியப் பகுப்பும், ஊர்ச்சபை வினைஞர் கடமையும், அவர் கடமை தவறியவழி அடையவேண்டிய தண்டமும், பற்றியவாகும். தேர்தலை விதிப்படி நடத்த வேண்டிய பொறுப்பு பெரும்பாலும் அதிகாரிகளுடையதாதலின், ஊர்ப் பொது மக்கள் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியிருந்தவை, வாரியத்திற்குத் தக்கார் தகாதார் யார் யார் என்பதே. கீழ்க்காணும் தகுதிகளையெல்லாம் ஒருங்கேயுடையார் தக்காராவர்: (1) காணிக்கடன் செலுத்தும் நிலம் கால்வேலிக்குக் குறையாமல் உடைமை, (2) சொந்த மனையிற் கட்டிய வீட்டில் குடியிருத்தல். (3) சிறந்த கல்வியுடைமை. (4) காரியம் நிறைவேற்றும் ஆற்றலுடைமை, அறநெறியில் ஈட்டிய பொருளைக் கொண்டு செம்மை யான வாழ்க்கை நடாத்துதல். முப்பத்தைந்தாண்டிற்குக் குறையாதும் எழுபத்தைத் தாண்டிற்குக் கூடாதுமிருத்தல், (7) முந்திய மூவாண்டிற்குட்பட்டு எந்த வாரியத்திலும் இருந்திராமை. கீழ்க்காண்பவர் தகாதாராவர்: (1) எந்த வாரியத்திலேனுமிருந்து கணக்குக் காட்டாதார். (2) ஐம்பெருங் குற்றம் செய்தோர். (3) ஊர்க் குற்றப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டோர். (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/183&oldid=1431678" இலிருந்து மீள்விக்கப்பட்டது