பக்கம்:தேவநேயம் 1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அதிகாரிகளின் அமாத்தம் பாவாணர் 165 உயிரச்ச நோட்டமாவது, அரசனால் விடுக்கப்பட்ட வேறு சிலருடன் ஒரு பொய்க் காரணத்தையிட்டு அவன் சிறை செய்யப் பட்டபின், உடனிருப்போருள் ஒருவன், முன்னேற்பாட்டின்படி, “இவ்வரசன் நம்மைக் கொல்லத் துணிந்தான். நாம் முற்பட இவனைக் கொன்று விட்டு நமக்கினிய ஒருவனை அரசனாக்கு வோம். உன் கருத்து யாது?" என்று தானே வினவுவதுபோல் வினவி, அவன் கருத்தைச் சூளுறவோடு சொல்வித்தல், இவ்வகை நோட்டத்தையே, அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் என்னுங் குறளால் (501) தெரிவித்தார் திருவள்ளுவர். சில பதவிகட்குச் சில குடியினர் சிறப்பாகத் தெரிந்து கொள்ளப் பட்டனர். அமைச்சப் பதவிக்கு வேளாளர் அல்லது வேளிரே தகுந்தவராகக் கருதப்பட்டார் நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான் மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான் அந்த வரசே யரசு என்பது ஔவையார் கூற்று. அறமும் மதமும்பற்றிய வினைகட்கெல்லாம். பெரும்பாலும் பார்ப்பனரே அமர்த்தப்பட்டனர் என்பது. அறக்களத் தந்தணர் தருமாசனபட்டர் என வருந்தொடர்களால் அறியலாகும். தூதிற்குப் புலவரும் பார்ப்பனரும் ஆளப் பெற்றனர். ஊர்ச்சபைத் தேர்தல்: ஒவ்வோர் ஆள்நிலவூரிலும் ஆண்டுதோறும் ஆளுங்கணத்தேர்தல் நடைபெற்றது. ஓர் ஆளுங்கணத்தின் ஊழிய ஆண்டு முடிவுறுஞ் சமையத்தில், அதனைக் கண்காணிக்கும் நாட்டதிகாரிக்காவது ஊரதிகாரிக்காவது, அரசனால் மதிக்கப் பட்ட ஒரு பெருமகனுக்காவது, ஊர்ச்சபைத் தேர்தலை நடத்தி வைக்கும்படி, அரசனிடத்திருந்து தேர்தல் விதிகளடங்கிய ஆணைவரும். ஆணைபெற்ற அதிகாரி உடனே அதை ஊர்ச்சபையார்க்குக் காட்டுவன். அவர் அதைத் தலைமேற்கொண்டு கண்ணிலொற்றி அதன்படி செய்யத் தொடங்குவர். ஒவ்வோர் வரும் தேர்தல் வினைப்பொருட்டுப் பல குடும்பு களாகப் (Wards) பகுக்கப்பட்டிருக்கும். செங்கற்பட்டு மாவட் டத்தைச் சேர்ந்த உத்தரமேரூர் (உத்தர மேலூர்) முப்பது குடும்புகளையும், தஞ்சை மாவட்டத்தில் இன்று செந்தலை என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/182&oldid=1431677" இலிருந்து மீள்விக்கப்பட்டது