பக்கம்:தேவநேயம் 1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அந்தி பாவாணர் 175 (பரிபா. 4: 71), 7. அமரிக்கை . 8. சமந்தம் (சாந்தம்), 9. நிறைவு. “நகரமைதி செப்புவாம்” (சீவக. 78). 10. பொந்திகை. அமை - அமைவு, அமை - அமைப்பு - அமைப்பகம். அமை - அமையம் = பொருந்திய வேளை. "ஆனதோரமையந் தன்னில்” (கந்தபு. திருக்கல், 72}, ஒ.நோ. நேர் - நேரம். அமையம் - சமையம் = தகுந்த வேளை, வேளை. அமை - சமை. சமைதல் = 1. அமைதல் 2. நிரம்புதல். “மலர்ந்து சமைந்த தில்லைகாண்” (திருவிருத். 68, வ்யா, 357), 3. முடிதல், 4. அரிசி காய்கறி முதலிய உணவுப் பொருள்கள் வெந்து உண்ணத் தகுதியாதல், 5. வேதல், 6, புழுங்குதல். இந்தக் கூட்டத்தில் சமைந்து விடுகிறது. 7. அழிதல், “ஐவர் தலைவருஞ் சமைந்தார்” (கம்பரா, பஞ்சசே, 67), 8. பெண் பிள்ளை பூப்படைந்து நுகர்ச்சிக்குத் தகுதி யாதல். “சமைந்தால் தெரியும் சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும்” (பழ.). 9. மக்கள் இறைவனை வழிபட்டும் அறநெறியில் ஒழுகியும் அவன் திருவருளைப் பெற அல்லது திருவடிகளை யடையத் தகுதியாதல், 10, ஏதேனும் ஒரு நிலைமைக்கு அல்லது கருமத்திற்கு அணியமாதல், ம. சமை . சமைத்தல் = 1, உணவுப் பொருளை வேவித்தல். 2. ஒன்றைச் செய்து முடித்தல். 3. அழித்தல், "மாதரைத் தங்கழலாற் சிலர் சமைத்தார்" (கம்பரா. கிங்கர, 42). ம. சமெ. க. சமை, தெ. சமயு. சமை - சமையல் = உணவவித்தல். சமை - சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா ) இறைவன் திருவடிகளையடையச் சமையும் வகை பற்றிய மதம், சமயம் - வ, ஸமய, சமையம் என்பது வேளையையும், சமயம் என்பது மதத்தையும், குறிக்கும் என வேறுபாடறிக. அமை = 1. அமைவு. 2. கூட்டம். 3. கெட்டி மூங்கில். “அமையொடு வேய்கலாம் வெற்ப்” (பழமொ . 357). அமை - அவை = 1. மாந்தர் கூட்டம். (பிங்.) 2. அறிஞர் கூட்டம், அவையறிதல் (குறள்), 3. அவை மண்டபம். “தமனியத் தவைக்கண் (கந்தபு. நகரழி. 6), 4. நாடகவரங்கு. கூத்தாட்ட வை . (குறள். 332), ஒ.நோ. அம்மை - அவ்வை. செம்மை - செவ்வை. அவை - சவை = அறிஞர் கூட்டம், “சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான்” (மூதுரை, 13).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/192&oldid=1431688" இலிருந்து மீள்விக்கப்பட்டது