பக்கம்:தேவநேயம் 1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

174 தேவநேயம் அந்தி அமர்த்தல் = 1. பொருந்திப் பொருதல். ஒ.நோ. பொருதல் = பொருந்துதல், போர்செய்தல். 2. மாறுபடுதல், "பேதைக் கமர்த்தன கண்” (குறள். 1084).) அமர் = 1. போர் (சூடா.). 2. போர்க்களம். "அஞ்சுவரு தானை யமரென்னும் நீள்வயலுள் (பு.வெ. 8:5), 3. கடுமை. (W). 4. வலிமை. அமர் - சமர் = போர். அமரகம் = போர்க்களம். “அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா” (குறள். 814), அமர் - அமரி = போர்த் தெய்வமாகிய கொற்றவை யென்னுங் காளி. அமரி - சமரி = போர்த் தெய்வமாகிய காளி. “அமரி குமரி கவுரி சமரி” (சிலப். வேட் 67). அமர் - அமரம் = 1, போர். 2. ஆயிரங் காலாட் படைத் தலைமை. (W). 3. பண்டைப் படை மறவர்க்கு விடப்பட்ட ஊழிய மானிய நிலம். (I.M.P.CL.344) தெ. அமரமு. அமரம் - சமரம் - வ. ஸமர. வடமொழியில் சமர் என்னுஞ் சொல்லின்மையை நோக்குக. சமர் - சமர்த்து = போர்த் திறமை, திறமை. “சமர்த்தாற்று மாற்றால்” (அரிச். 4. இந்திர. 46). சமர்த்து - வ. ஸமர்த்த . சமர்த்து - வ. ஸாமர்த்ய . அம் - அமை. அமைதல் = 1. நெருங்குதல். “வழையமை சாரல்” (மலைபடு, 181), 2. பொருந்துதல், “பாங்கமை பதலை" (கந்தபு, திருப்பர, 9), 3, தங்குதல், "மறந்தவணமையா ராயினும்” (அகநா. 37), 4. தகுதியாதல். 5. உடன்படுதல். “கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை” (குறள். 803), 5. ஏற்புடைய தாதல். "பொருள் வேறுபட்டு வழீஇயமையுமாறு” (தொல். பொ. 196 உரை), 7. தீர்மானமாதல், அந்த வீடு எனக்கமைந்தது. 8. அடங்குதல், "அமையாவென்றி (கல்லா. முருக. 15.) 9.நிறைதல்."உறுப்பமைந்து" (குறள் 761), 10, போதியதாதல். "கற்பனவுமினியமையும்" (திருவாச. 39: 3}, 11. பொந்திகை (திருப்தி) யாதல், “அமைய வுண்மின்” (W.). 12. கூடியதாதல், "காரியம் - அமையு மாயினும்" (சேதுபு. அவை.2) 13. முடிவடைதல். “அமைந்ததினி நின்றொழில்” (கலித். 82). அமை - அமைதி = 1. பொருந்துகை. 2. சமையம். “அன்னதோ ரமைதி தன்னில்" (கந்தபு. மூன்றா . 210), 3. தன்மை . "ஆற்றின தமைதி" (சீவக. 1176), 4. செய்கை . "அமைதி கூறுவாம்” (கந்தபு. தெய்வ. 185), 5. அடக்கம். 6. தாழ்மை . “தொழுதகை யமைதியின்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/191&oldid=1431687" இலிருந்து மீள்விக்கப்பட்டது