பக்கம்:தேவநேயம் 1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அந்தி பாவாணர் 173 சிற்றம்பலம் - வ, சிதம்பர. சிறு + அம்பலம் = சிற்றம்பலம், பேரம்பலம் என்பதற்கு எதிர். வடமொழியாளர் சித் + அம்பர என்று பிரித்து, ஞானசபை என்று பொருள் கூறுவர். அம்பலக்கல், அம்பலக் கூத்தன், அம்பலகாரன், அம்பலச் சாவடி, அம்பலத்தாடி, அம்பலத்தி (தில்லைமரம்), அம்பலப்படுத்துதல், அம்பலமேறுதல், அம்பலவரி, அம்பலவாணன் முதலிய தூய தமிழ் வழக்குண்மையையும், பேரம்பர என்னும் வழக்கின்மை யையும், அம்பர என்னும் சொல்லிற்கு வடமொழியில் அம்பலம் என்னும் பொருளின்மையையும், நோக்குக. அம்பலம், தில்லையம்பலம், திருச்சிற்றம்பலம், பொன்னம்பலம், வெள்ளியம்பலம், மணியம்பலம் என வருமிடமெல்லாம் லகரம் ரகரமாகாமையும் காண்க. அம் - அமல், அமல்தல் =1, தெருங்குதல். “வேயம லகலறை” (கலித், 45), 2. கூடுதல், திரள்தல், அமல் = நிறைவு. (ஞானா. 34), அமல் - அமலை = 1, செறிவு. “அடுசினத் தமலையை” (ஞானா. 43), 2. பட்ட வேந்தனைச் சூழ்ந்து நின்று மறவர் திரண்டு ஆடும் ஆட்டம். "பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும்” (தொல். புறத். 17).3. சோற்றுத்திரளை. "வெண்ணெறிந் தியற்றிய மாக்க ணமலை” (மலைபடு, 441), 4, மிகுதி. (திவா.). அமல் - அமர், அமர்தல் = 1. நெருங்குதல். “அமரப் புல்லும்” (திருக்கோ , 372), 2. பொருந்துதல். “தன்னம ரொள்வாள்" (பு.வெ. 4:5), 3. படிதல், 4. அமைதல். வேலையில் அமர்ந்தான். 5. அமர்ந் திருத்தல். (கந்தபு. கடவுள். 12}, 5. அமைதியாதல். காற்றமர்ந்த து. அமரிக்கை . 7. இளைப்பாறுதல். 8. ஒத்தல். 'அமர' ஓர் உவம வுருபு. (தொல். உவம். 11, உரை) 9. விரும்புதல். “அகனமர்ந்தீத லினன்றே ” (குறள். 92).10. தகுதல், ஏற்றதாதல். குலத்திற் கமர்ந்த தொழில். அமர் - அமர்கை - அமரிக்கை . அமர்தல் = விரும்புதல், அன்பு கூர்தல், நேசித்தல், “அமர்தல் மேவல்” (தொல். உரி, 82), "ஆத்திசூடி யமர்ந்த தேவனை” (ஆத்தி. கடவுள்.). “அண்ண ல் இரலை அமர்பிணை தழீஇ” (அகநா. 23). அமர் = விருப்பம். த, அம் - அமல் - அமர். அம்முதல் = பொருந்துதல். L. amo, amare to love, amor, love, amator, a lover, a friend, amatrix, sweet heart, amicus, friendly, amice, in friendly manner. இவ் விலத்தீன் சொற்களினின்று , amateur, amative, amatory, amiable, amicable, amoret, amorist, amoroso, amorous, amour, paramour முதலிய ஆங்கிலச் சொற்கள் திரிந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/190&oldid=1431686" இலிருந்து மீள்விக்கப்பட்டது