பக்கம்:தேவநேயம் 1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

172 தேவநேயம் அந்தி எதிர்மறை சிறப்டையம் எச்சமுற் றளவை தெரிநிலை யாக்கமோ டும்மை யெட்டே. (நன். 425) உம்மை யிடைச்சொல், பெயர்ச் சொற்களையும் உரிச்சொற் களையும் வினையெச்சங்களையும் இணைக்கும். எ-டு: அறமும் பொருளும் இன்பமும் வீடும் - பெயர். "மழவுங் குழவும் இளமைப் பொருள” - உரி, சொல்லியும் எழுதியும் வருகிறான் - வி.எ. உம் - அம் = நீர், "அம்தாழ் சடையார்” (வெங்கைக் கோ, 35) நீர் தன்னொடும் பிறிதொடும் கலக்குந் தன்மையது. செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. (குறுந். 1180 அம் - அம்பு = நீர். ஒ.நோ. கும் - கும்பு. அம்பு - வ. அம்பு. அம்பு - அப்பு = நீர்(பிங்). ஒ.நோ. கும்பு - குப்பு, அப்பு - வ. அப். அம் - ஆம் = நீர். “ஆமிழி யணிமலை” (கலித் 48) அம், ஆம் என்னும் இருவடியும் வடிமொழியி லின்மையை நோக்குக. அம்பு - அம்பல் = 1, கூடுதல், குவிதல், முகிழ்த்த ல் 2. பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை (பேரரும்பு) (இறை. 22, உரை). 3. சிலரே யறிந்து புறங் கூறும் மொழி. “அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின்” (தொல். கள. 48). அம்பல் - ஆம்பல் = இரவில் மலர்ந்து பகலிற் குவிவதாகச் சொல்லப்படும் அல்லி. அல் (இரவு) - அல்லி, ஒ.நோ. கும் - குமுது - குமுதம். ம., து. ஆம்பல், க. ஆபல், அம்பு - அம்பலம்=1. பலர் கூடுமிடம்."ஆனைத் தீக்கெடுத் தம்பல மடைந்ததும்” (மணி. பதி. 67). 2 ஊர்ச்ச வை. 3. கற்றோர் கழகம். “அரைச்சொல் கொண்டு அம்பல மேறலாமா?” (பழ). 4. தில்லைப் பொன்னம்பலம். “சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்தும்” (திருக்கோ . 11), 5. நாடகங் காண்போ ரிருக்கை, “அம்பலமு மரங்கமும்” (சீவக. 2112), 6. ஊர்த் தலைவன். 7. சிற்றூர் அலுவல் வகை. ம. அம்பலம், க. அம்பல, து. அம்பில, வ. அம்பர. சிற்றம்பலம், பேரம்பலம் என்பன தில்லையீரம்பலங்களைக் குறிக்கும் உறவியலிணைச் சொற்கள் (relative terms),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/189&oldid=1431685" இலிருந்து மீள்விக்கப்பட்டது