பக்கம்:தேவநேயம் 1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அந்தி பாவாணர் அந்தி உம்முதல் = கூடுதல், முன்வருதல் (தோன்றுதல்), முன் செல்லுதல் (செல்லுதல்), நெருங்குதல், கூடுதல், பொருந்துதல், வளைதல், துளைத்தல், துருவுதல் ஆகிய எண்பெருங் கருத்துக்களிலும், உகரவடி மூலவேர்ச்சொல் சொன் முதன் மெய்களாகிய கசதநபம் என்னும் ஆறொடுங் கூடி, அறுவழி வேர்ச் சொற்களைப் பிறப்பிக்கின்றது. அதன்படி, கூடுதற் பொருள் கொண்ட உம் என்னும் மூலவேர்ச் சொல்லினின்று, கும் சும் தும் நும் பும் மும் என்னும் அறுவழி வேர்ச்சொற்கள் பிறக்கும். 1. கும். கும்முதல் = கூடுதல், திரள்தல். 2. சும். சும்மை = தொகுதி. “சுடரின் சும்மை விசும்புற” (கம்பரா. இலங்கை காண். 33). சும் - சொம் = சொத்து. 3. தும். தும் - திம் - திம்மை = பருமை, பருமன். திம்மலி (திமிலி) = பருத்தவள். திம்மன் = பருத்த ஆண் குரங்கு. திமி = பெருமீன் (திவா.), திமிறுதல் = நீண்டு பருத்து வளர்தல். திமிலம் = பெருமீன் (பிங்.). 4. நும். - (இறந்துபட்டது). 5.பும். பும் - பொம் - பொம்மல் = 1. கூட்டம். "பொலிந்தன வுடுவின் பொம்மல்” (கந்தபு, காசிபன் புல. 28), 2. பருமன், "பொம்மல் வனமுலை” (சீவக. 2717}.3. மிகுதி. "புகுந்தவவ் விருளின் பொம்மல்” (இரகு. இலவாண. 55), 4. பொலிவு, "பொன்னனைய பொம்மனிறம்” (கம்பரா. உருக்கா. 68). பொம்மு தல் = மிகுதல், "அதிர்குரல் பொம்ம” (பாரத, பதினான். 112), பொம்மெனல் = அடர்ச்சிக் குறிப்பு, “பொம்மெனிருள் வாய்” (திருக்கோ , 395), 6, மும். மும் - மம் - மம்மல் = மயங்கல் - மசங்கல் (அந்தி நேரம்) என்று கொள்ளவும் இடமுண்டு. மம்மல் - மம்மர் = மயக்கம். "மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகும்” (நாலடி. 14), மயங்குதல் என்னுஞ் சொல்லின் முதற் பொருள் கூடுதல் (கலத்தல்) என்பதே, உம் என்னும் சொல் கூடுதல் என்னும் வினைப் பொருளில் வழக் கிறந்தது. அப் பொருளுண்மையாலேயே அது கூட்டிணைப்புச் சொல்லாகக் (copulative conjunction) கொள்ளப்பட்டது. இணைப் பிடைச் சொல்லாக வரும் உம்மைச் சொல்லை எண்ணும்மை யென்பது இலக்கண மரபு. எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் என் றப்பா லெட்டே உம்மைச் சொல்லே (தொல். இடை. 7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/188&oldid=1431684" இலிருந்து மீள்விக்கப்பட்டது