பக்கம்:தேவநேயம் 1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

178) தேவநேயம் அந்தி சந்து செய்தல் = பிணங்கிய இருவரைச் சேர்த்து வைத்தல், சந்து சொல்லுதல் = பிணங்கியவரை இணக்கும் தூது சொல்லுதல். 'தடுநின்றா ரிருவருக்குஞ் சந்து சொல்ல' (சிலப். 8:01, உரை). சந்து போதல் - பிணங்கியவரை இணக்குத் தூது போதல், சந்து போனவன் = உறுப்புக் கட்டில்லாதவன், முடவன். சந்துவாதம் = இடுப்பில் வரும் ஊதைநோய். சந்துவாய் = மூட்டுவாய், அந்து என்பது சந்து என்றானபின், அந்தியென்பது சந்தி யென்றாகிக் காலையந்தியைச் சிறப்பாகக் குறித்தது. அதனால், அந்தியென்னும் பொதுப்பெயர் மாலையந்திக்கே சிறப்புப் பெயராயிற்று, அந்தியும் சந்தியும் அவனுக்கு இதே வேலை என்பதில், சந்தி யென்பது காலையைக் குறித்தல் காண்க. அந்திக்கடை, அந்திக்காப்பு, அந்திக்காவலன், அந்திக்கோன், அந்திச்செக்கர், அந்திப்புள் தீங்கு (தோஷம்), அந்தி மந்தாரம், அந்திமந்தாரை, அந்திமல்லிகை, அந்திவண்ணன், அந்திவானம் என்னும் சொற்களில், அந்தியென்பது மாலையைக் குறித்தல் வெளிப்படை அந்திமழை அழுதாலும் விடாது அந்தியீசல் அடைமழைக் கறிகுறி என்னும் பழமொழிகளிலும், அந்தியென்பது மாலையையே குறித்தது. கூடுதல் அல்லது கலத்தல் என்னும் அடிப்படைக் கருத்தில், அந்தி சந்தியென்னுஞ் சொற்கள் பல்வேறு பொருள்களைக் குறிக்கும். அந்தித்தல் = 1. சந்தித்தல், “யமபடையென வந்திக்குங் கட்கடை யாலே" (திருப்பு, 85), 2. கிட்டுதல், 'வேதமந்தித்து மறியான்' (திருவிளை, நகர, 106), 3. பணமுடிப்பாக முடித்து வைத்தல். "அந்தித்திருக்கும் பொருளில்லை ” (திருவாலவா, 30:14), சந்தித்தல் = 1. எதிர்தல். "சந்தித்திடற் கெளிதோ விந்தவாழ்வு” (திருக்கருவை, கலித். 75), 2. கண்டு கொள்ளுதல், “மயில்வாகனனைச் சந்திக்கிலேன்” (கந்தரலங். 50). 3. சேர்த்தல். “சந்தித்த கோவணத்தர்” (தேவா. 16:9). சந்தி = 1. கூடுகை, 2. பல தெருக் கூடுமிடம். “சதுக்கமுஞ் சந்தியும்” (திருமுரு.225), 3, இணைப்பு.4. பல பொருத்து அல்லது கணுவுள்ள மூங்கில் (பிங்.). 5. எழுத்துப் புணர்ச்சி. 6. தட்பாக்குகை (குறள். 633, உரை), 7. தறுவாய். நல்ல சந்தியில் வந்தான். 8. ஒரு பெரும்பண். (பிங்.). 9. நாடகச்சந்தி. (சிலப். 3:13, உரை ) 10. வரிக்கூத்து வகை. (சிலப். 3:13, உரை ),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/195&oldid=1431691" இலிருந்து மீள்விக்கப்பட்டது