பக்கம்:தேவநேயம் 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அந்தி பாவாணர் 179 சந்திக்கரை = சாலையும் ஆறும் கூடுமிடம். சந்திக் கருப்பன் = தெருச் சந்திகளில் வைத்து வணங்கும் சிறு தெய்வம். சந்திக் கிழுத்தல் = தெருச்சந்திக்கு வரச் செய்து குற்றங் குறைகளை வெளிப்படுத்தல். சந்திக் கூத்து = தெருச்சந்தியில் ஆடும் ஆட்டம். சந்திக்கோணம் = தேருறுப்புக்களுள் ஒன்று. “சந்திக் கோணமு மந்திரவாணியும்” (பெருங். உஞ்சைக். 58:51), சந்திசிரித்தல் = தெருச்சந்தியில் மக்கள் பழித்தல். சந்திப்பாடு = தெருச்சந்தியிலுள்ள பேய்களால் ஏற்படும் கோளாறு, சந்திப்பு = 1. எதிர்கை . 2. ஆறு, தெரு, பாதை முதலியன கூடுமிடம். 3. பெரியோரைச் சென்று காண்கை. 4. பெரியோர்க்குக் கொடுக்குங் காணிக்கை. சந்திமறித்தல் = கொள்ளை நோய்க் காலத்தில் தெருச்சந்தியிற் கொடை கொடுத்துத் தீய தெய்வங்களின் சினந்தணிக்கை, சந்திமிதித்தல் = 1. நாலாம் மாதத்தில் நல்ல வேளையில் குழந்தையைத் தெருச்சந்திக்குத் தூக்கிச் செல்லுதல். "நாலாகு மதியிற் சந்திமிதிப்பது நடத்தி” (திருவிளை, உக்கிர, 27) 2. அம்மை நோய் நீங்கியபின் தெருச் சந்தியில் முதன் முதலாக வந்து மிதித்தல், சந்தியில் நிற்றல் = களைகணின்றித் தெருச்சந்தியில் நிற்றல். சந்தியில் விடுதல் = போக்குப் புகலில்லாதவாறு செய்தல், சந்தியிற் கொண்டு வருதல் = குற்றங் குறைகளை வெளிப்படுத்திப் பலர் பழிதூற்றுமாறு செய்தல். முச்சந்தி = மூன்று தெருக் கூடுமிடம். நாற்சந்தி = நான்கு தெருக் கூடுமிடம். சொற் புணர்ச்சியைக் குறிக்கச் சந்தி யென்னுஞ் சொல் பண்டை நூல்களில் ஆளப்படாவிடினும், அப்பொருளையுங் குறிக்கத் தகுதி வாய்ந்த தமிழ்ச் சொல்லே அஃதென்பதை அறிதல் வேண்டும். வடவர் அப்பொருளில் அச்சொல்லை ஆண்டுவிட்டதனால், அது வடசொல்லாகி விடாது. சந்து - சந்தை (ஓ.நோ. மந்து - மந்தை ) = 1. பலவூர் வணிகரும் விற்பனையாளரும் கூடுமிடம். “தந்தை தாய் தமர் தார மகவெனு மிவையெலாம் சந்தையிற் கூட்டம்” (தாயு தேசோ. 3), 2 கூட்டம். “தண்ணுறு நந்தனம் வண்டின் சந்தையே” (பிரபுலிங். கொக்கி, 6),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/196&oldid=1431692" இலிருந்து மீள்விக்கப்பட்டது