பக்கம்:தேவநேயம் 1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அம் பாவாணர் அப்பம் - அபூப (இ.வே.) உப்புதல் = ஊதுதல், எழும்புதல், பருத்தல். உப்பு - (உப்பம்) - அப்பம். ஊது - ஊத்து = பருக்கை. ஊத்து + அப்பம் = ஊத்தப்பம். ம. அப்பம், தெ. அப்பமு, க., து. அப்ப. அப்பளம் - பர்ப்பட (t) அப்பளித்தல் = சமமாகத் தேய்த்தல். அப்பளி - அப்பளம். (வ.வ.74) தெ. அப்பளமு, க. அப்பள, ம. பப்படம். அம் அம் (பொருந்தற் கருத்து வேர்) உம்முதல் = கூடுதல், பொருந்துதல். உம் - அம். அம்முதல் = க. நெருங்குதல். அம் - அமல். அமல்தல் = நெருங்குதல், வேயம லகலறை (கலித். 451 அம் - அமை. அமைதல் = (1) நெருங்குதல். வழையமை சாரல் (மலைபடு. 181 (2) நிறைதல். “உறுப்பமைந்து” (குறள். 761) அமல் = நிறைவு. (ஞானாமிர்தம், 34) (3) போதியதாதல், உளம் நிறைதல். அமைவு = பொந்திகை (திருப்தி ) (4) பொருந்துதல். பாங்கமைடதலை (கந்தபு. திருப்பர். 9) அமர்தல் = 1. பொருந்துதல், “தன்னம ரொள்வாள்” (பு.வெ:4,5) 2. ஒத்தல். அமர, ஓர் உவமவுருபு. அம் - அம்பு - அம்பர் = ஒருவகைப் பிசின் M. ambar. அமைதி = பொருந்திய தன்மை, இலக்கணம். அமல் - அமலை = சோற்றுத்திரளை, வெண்ணெறித் தியற்றிய மாக்கணமலை (மலைபடு, 441 அமலை = மிகுதி. அமல் - அமள் - அமளி = மிகுதி. M. amali. அமை = கெட்டி மூங்கில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/198&oldid=1431694" இலிருந்து மீள்விக்கப்பட்டது