பக்கம்:தேவநேயம் 1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

182 தேவநேயம் சேரே திரட்சி (தொல். 846) அமையொடு வேய்கலாம் வெற்ப பழமொழி, 357) அமலை M. ama, = படைமறவர் திரண்டு ஆரவாரித்தாடும் ஆட்டம், ஆரவாரம். அமளி = ஆரவாரம். அம் = (1) நிலத்தொடு பொருந்தும் நீர். அந்தாழ் சடையார் (வெங்கைக் கோவை, 35) செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே என்னுங் குறுந்தொகையடிகளை (40) நோக்குக. அம் - ஆம் = நீர். ஆமிழியணிமலை (கலித். 48 பூமரு தேன்பட்டுப் புனுகுசவ்வா (து) - ஆம் அழன்மற்று (நீதிவெண்பா) அம் - அம்பு = நீர். அம்பு = ambu (S.) அம் - அப் (S.) M. ambu. அம் = (2) அழகு, கிஞ்சுகவா யஞ்சுகமே திருவாசகம், 19, 51 அம் - அம்மை = 1. அழகு. (பிங்.) ஆம் = அழகு. ஆம்பாற் குடவர் மகளோ (சீவக 492 நீரால் வளம் ஏற்படுவதால் அழகு தோன்றும். ஒ.நோ. கார் = நீர், அழகு, அமரல் = பொலிவு (திவா.) அமர்தல் = 3. அன்பு கூர்தல், உளத்தாற் பொருந்துதல், காதலித்தல், விரும்புதல். அமர்தல் மேவல் தொல். 863) அகனமர்ந் தீதலி னன்றே (குறள். 92) ஆத்திசூடி யமர்ந்த தேவனை ஆத்திசூடி, கடவுள் வாழ்த்து) CIK. L. amare, Love. E. amateur, amatory, amiable, amorist, amorous, amour, Paramour etc. அம்முதல் = உ. கூடுதல், குவிதல். அம் - அம்பு - அம்பல் = குவிந்தமொட்டு, சிலரறிந்து கூறும் புறங்கூற்று. அம்பலும் அலரும் களவு (தொல். 1085) அம்பல் - அம்பலம் = கூட்டம், கூடுமிடம். வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன் (சிலட்ட பதிகம், 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/199&oldid=1431695" இலிருந்து மீள்விக்கப்பட்டது