பக்கம்:தேவநேயம் 1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் K. ambala, M. ampalam, Tu.ambila, s. ambara. அம்பல் - ஆம்பல் = பகலிற் குவியும் அல்லி, பலகோடி கொண்ட ஒரு பேரெண். | ஆம்பலத் தீங்குழற் றெள்விளி பயிற்ற (குறிஞ்சி. 222 ஆம்பலத் தீங்குழல் கேளாமோ தோழீ (சிலப். ஆய். பா.2) K.abal, M. Tu. ambal. இரவில் மலர்வதால் அல்லி என்றும், பகலிற் குவிவதால் குமுதம் என்றும் பெயர் பெற்றிருத்தலும் காண்க கும்முதல் = குவிதல், அமர்தல் = 4. இருத்தல், அமர்வு = இருப்பிடம். அலிபுருடோத்தம னமர்வு (திவ். பெரியாழ். 4,7,8) M. Amaruka. கிடையமர்தல் = மந்தையை இருத்துதல். அமைதல் = (5) தங்குதல், மறந்தவண் அமையாராயினும் அகம். 37) அமர்தல் = 5. படுத்தல், அமளி = படுக்கை . அமளியங்கட் பூவணைப்பள்ளி (சீவக. 1710) M. amali (அமளி) அமர்தல் = 6. வேலையில் அமர்தல். T. amaru, K. amar. அமர்தல் = 7, அமைதியாதல், அடங்குதல், படிதல், இளைப் பாறுதல், இசைதல், அணைதல், தாழ்தல். அம்மை = 2. அமைதி. அம்மையஞ் சொல்லா (சீவக. 3131) 3. சொற்சுருங்கியும் அடி பல்காதும் அடங்கிநிற்கும் பனுவல் வகை. சின்மென் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அம்மை தானே அடி நிமிர் பின்றே (தொல். 1491 M. ameyuka - amekka. அமர் - அமரிக்கை = அடக்கம். T. amarika M. amarcca. அமர்தல் = 8, விளக்கணைதல், விளக்கானது காற்றினால் அமருமா போல (குருபரம். 305) M. amaral. அமர் - அமர்த்து . அமர்த்துதல் = அழாதிருக்கச் செய்தல், அமை - அமைதி. அமைவன் = முனிவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/200&oldid=1431696" இலிருந்து மீள்விக்கப்பட்டது