பக்கம்:தேவநேயம் 1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

184 தேவநேயம் அமர்தல் = 9. அமைதல், ஏற்படுதல். வீடமர்தல் = குடியிருக்க வீடு ஏற்படுதல். அமைதல் = (6) ஏற்படுதல், அமைதல் = (7) சமைதல், பதமாதல், நுகருதற்கேற்ற நிலைமையை அடைதல், அணியமாதல் (ஆயத்தமாதல்). அமைத்தல் = ஆக்குதல், சமைத்தல். ஐந்து பல்வகையில் கறிகளும் - அமைப்பேன் (பாரத. நாடுகர. 15) அமை - சமை. M. camayuka (சமையுக) ஒ.நோ, இறகு - சிறகு, இளை - சிளை, உருள் - சுருள், உலவு சுலவு, உழல் - சுழல், எட்டி - செட்டி, ஏண் - சேண். சமைத்தல் = ஆக்குதல், பதப்படுத்தல், தகுதியாக்குதல், அணியமாக்குதல், M. camekka (சமெக்க). சமைதல் = சோறாதல், பெண் பூப்படைதல், மணஞ்செய்யத் தகுதியாதல், தகுதியாதல், சமை - சமையம் - சமயம் = ஆதன் (ஆன்மா ) இறைவனை யடையத் தகுதியாகும் ஒழுக்கம் அல்லது நெறி. அரிசி உண்ணச் சமைதலும், பெண் மணக்கச் சமைதலும் போன்றதே, ஆதன் இறைவனை அடையச் சமைதல். சமைவு = நிலைமை. அமைதல் = (8) நேர்தல். அமை - அமையம் = நேரம். ஒ.நோ. நேர் - நேரம், நேர்தல் = நிகழ்தல். ஆனதோ ரமையந் தன்னில் (கந்தபு. திருக்கல். 72 அமையம் - சமையம். அமர்தல் = 10. பொருந்துதல், கலத்தல், பொருதல், இருவர் அல்லது இருபடைகள் கலந்தே பொருதலால், கலத்தற் கருத்தில் பொருதற் கருத்துத் தோன்றிற்று. ஒ.நோ. கைகலத்தல் = சண்டையிடுதல். கல - கலாம், கலகம். பொரு - போர். பொருதல் = பொருந்துதல், போர் புரிதல். அமர் M. anar = போர். அமர் - அமரம். அமர் - அமர்த்த ல் = போரிடுதல், மாறுபடுதல், பேதைக் கமர்த்த ன கண் (குறள். 1084) அமரி = போர்த்தெய்வமான காளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/201&oldid=1431697" இலிருந்து மீள்விக்கப்பட்டது