பக்கம்:தேவநேயம் 1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

186 தேவநேயம் அம்பரம் அவை - சவை - Sabha (S) ஒ.தோ. இளை - சிளை, ஏமம் - சேமம். ஒ.நோ. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் (925) அவையடக் கியலே அரில்தபத் தெரியின் (1370) என்று தொல்காப்பியத்திலும், நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து என்று தொல்காப்பியச் சிறப்புப்பாயிரத்திலும், அவை, அவையம் என்னும் இருவடிவுச் சொற்களும் வந்திருத்தல் காண்க. சபா என்னும் சொல்லை வடமொழியாளர் ச + பா என்று பிரித்து bha, to shine என்று பொருந்தப் பொய்த்தலாகப் பொருளுரைப்பர். பர். சட்டர்சியோ அதை ஒப்புக்கொள்ளாது; sib என்னும் தியூத்தானியச் சொல்லை மூலமாகக் காட்டுவர். sib என்பது உடன்பிறந்தாருள் ஒருவரையோ பலரையோ குறிக்கும் சொல், எருதந்துறைச் சிற்றகராதியை (The Concise Oxford Dictionary) எடுத்துப் பார்க்க. இருவகை மூலமும் எள்ளளவும் பொருந்தா மையை அறிஞர் கண்டு கொள்க. (வேக) அம்பரம் அம்பரம் - அம்பர. உம்பர் = உயர்ச்சி, மேலிடம், வானம், தேவருலகம். உம்பர் - உம்பரம் - அம்பரம். “ஒருமருந்தருங் குருமருந்தை உம்பரத்திற் கண்டேனே” (வே.சா). இதற்கு வடமொழியில் வேரில்லை. க. அம்மி, ம. அம்மிஞ்ஞி , (வ.வ: 74) அம்பல் அலர் ஒரு வினைத் தொடக்கத்தை அரும்பு நிலைக்கும் அதன் விரிவை அலர் நிலைக்கும் ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம். இரு காதலரின் களவொழுக்கத்தை ஓரிருவர் அறிந்து மறைவாய்ப் பேசுவதை அம்பல் என்றும், பலர் அறிந்து வெளிப்படையாய்ப் பேசுவதை அலர் என்றும் அகப்பொருள் இலக்கணம் கூறும். அம்பல் - அரும்பு. அலர் - விரிந்த மலர். (சொல். 8) அம்மணம் ஆடையில்லா வுடல்நிலையைக் குறிக்க. அற்றம் என்னும் இலக்கிய வழக்குச் சொல்லும் அம்மணம், முண்டம், மொட்டைக் கட்டை என்னும் உலக வழக்குச் சொற்களும், தொன்றுதொட்டு வழங்கி வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/203&oldid=1431700" இலிருந்து மீள்விக்கப்பட்டது