பக்கம்:தேவநேயம் 1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அம்மை பாவாணர் 187 இவற்றுள், அம்மணம் என்னும் சொல் சமணம் என்பதன் திரிபாகச் சென்னைப் ப.க.க.த. அகர முதலியிற் காட்டப்பட்டுள்ளது. சமணம் என்பது ச்ரமண என்னும் வடசொல்லின் திரிபு. சீரம் (ஏ.வி.) = களை, அயர், சோர், சலி, உழை, வெட்டிவேலை செய். ச்ரம (பெ) = களைப்பு, அயர்வு, சோர்வு, உழைப்பு, மெய்வருத்தம், ஓகப்பயிற்சி, தவம், உடம்பை வாட்டல். ச்ரமண (பெ.எ.) = உழைக்கின்ற, இழிந்த, கெட்ட, அம்மண; (பெ.) புத்தத் துறவி, சமணத் துறவி, முனிவன், அடியான், ஆண்டி (வ.வ) ஆச்ரம் = தவநிலையம், முனிவர் குடில், Gk gumnos = naked, gummosophistes - Egymnosophist = One of ancient Hindu philosophic sect going nearly naked and given up to contemplation, mystic, ascetic. Gk gumnasticos - E gymnastics = bodily exercise, ச்ரமண என்னும் வடசொல், சமணம், சமண, அமணம், அமண் என்றே தமிழில் திரிந்துள்ளது. அம்மணம் என்னும் தென்சொல் என்றும் அற்றம் ஒன்றையே குறிக்கும். அதுவும் சமயச் சார்பின்றி எல்லார்க்கும் பொதுவானதே. வடசொற்றிரிபுகளுள் ஒன்றேனும் அற்றத்தை உணர்த்துவதில்லை. அமணம் என்னும் வடிவம் செய்யுளில் அம்மணம் என்பதன் தொகுத்தல் திரிபாக வந்தே அற்றத்தை உணர்த்தும். சமணத் துறவியருள் ஒரு வகுப்பாரே திசையாடையர் (திகம் பரர்) என்னும் அம்மணர். சமணம் என்னும் சொல் உடம்பை வாட்டலையும் சமண மதத்தையுமேயன்றி அற்றத்தை உணர்த்தாது. பண்டைநாளில் அடியாருள்ளும் நாட்டில் வதியும் துறவிய ருள்ளும் சிலர் நீர்ச்சீலையே (கோவணமே) அணிந்திருந்தனர். காட்டில் வதிந்த முனிவர் சிலர் அதுவுமின்றி யிருந்தனர். ஆதலால், அம்மண நிலை சமணத் துறவியர்க்கே சிறப்பாக வுரியதன்று. அம்மணத்தைக் குறிக்கும் கும்னொஸ் என்னும் கிரேக்கச் சொல்லும் , பொதுவானதேயன்றிச் சமயச் சார்பானதன்று. ஆதலால், அம்மணம் என்னும் சொல்லைத் தென்சொல்லென்று கொள்வதே பொருத்தமாம். (வ.வ) அம்மை ' வைசூரிக்கு அம்மை என்னும் பெயர் இருப்பதால், காளியம்மை யினால் அந்நோய் வருவதாக நம் முன்னோர் கருதினர் என்றறி யலாம். இன்னும் அக்கருத்து பலர்க்கு நீங்கவில்லை. 'அம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/204&oldid=1431701" இலிருந்து மீள்விக்கப்பட்டது