பக்கம்:தேவநேயம் 1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

188) தேவநேயம் அமர் வந்திருக்கிறாள்' 'அம்மை விளையாடுகிறாள்' முதலிய வழக்கு களும், வைசூரி வந்தவுடன் காளிக்குச் செய்யப்படும் சிறப்புக்களும் அதை விளக்கும். முதுவேனிலில் தோன்றும் பாலைநிலத்திற்குத் தெய்வம் காளி யாதலாலும், அவ்வம்மையை ஓர் அழிப்புத் தெய்வமாக மக்கள் கொண்டதனாலும், வெப்பமிகுதியால் தோன்றி பலவுயிரைக் கொள்ளை கொள்ளும் வைசூரி நோயைக் காளியால் வருவ தென்று கருதி அதை அத் தெய்வத்தின் பெயரால் அம்மை என்றே அழைத்தனர் முன்னோர். (சொல் 25, 26,) அம்மை ' - அம்பா (இ.வே.) ம., தெ., க. அம்மா . அம்ம - அம்மா - அம்பா (வ.). OGamma,Them ammon, ammun, Ger amme (Twurse),Emamma. அம்பி, அம்பிஸ் (இ.வே), அம்பீ (இ.வே.), அம்பிகா (VS & TS), அம்பாலீ (TS), அம்பாலிகா (VS). amma என்னும் வடிவம் செ.ப.க.க.த. அகர முதலியில் வட சொற்போற் குறித்திருப்பது தவறாகும். அம்மம் (தாயின் முலை) என்ற சொல்லினின்றாவது ஆவின்கன்று கதறொலியினின்றாவது அம்ம என்னும் சொற் பிறந்திருத்தல் வேண்டும். "அம்ம முண்ணத் துயிலெழாயே” (திவ். பெரியாழ் 2:2:1). க. அம்மி, ம. அம்மிஞ்ஞி , (வ.வ. 74-75.) அமர் அம்முதல் = பொருந்துதல், அம் - அமர். அமர்தல் = பொருந்துதல், அமர் = பொருந்திச் செய்யும் போர், ஒ.நோ, பொருதல் = பொருந்துதல், போர் செய்தல், அமர்த்தல் = போர் செய்தல், வலிமை கொள்ளுதல், செருக்குதல். அம் - சம் - சமம் (போர்) - சமர் - சமரம் - ஸமர (வ.), (தி.ம. 735) அமரர் அல் - அ. மடி - மரி - மரன் - மரர். அ + மரர் = அமரர் (வ) மரி L. Mori, ம்ரு (இ.வே), (தி.மயின்,) அமிழ்தம் சாவா மருந்தாகிய இருவகை உணவுகள். உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும், நீரும் தொடர்ந்த பசி, தகை (தாக) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தலால் இவை இருவகை மருந்து. இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன் (புறம். 70) (திம.42)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/205&oldid=1431702" இலிருந்து மீள்விக்கப்பட்டது