பக்கம்:தேவநேயம் 1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

190 தேவநேயம் அயர் மேலும், அமை என்னுந் தமிழ்ச்சொல் அண்மைப் பொருளும் உணர்த்துவது கவனிக்கத் தக்கது. அமைதல் = நெருங்குதல், "வழையமைசாரல்” (மலைபடு. 181), (வ.வ. 75) அமைச்சு அமைத்தல் = பொருத்துதல், ஏற்பாடு செய்தல். அமை - அமைச்சு = அரசியல் முறையையும் வினைகளையும் செவ்வையாக அமைத்தல், ‘சு' தொழிற்பெயரீறு, ஒ.நோ. விழை - விழைச்சு. அமைச்சு - அமைச்சன், வேந்தன் என்னும் பெயர் வேந்து என்று குறுகுவதுபோல, அமைச்சன் என்னும் பெயரும் அமைச்சு என்று குறுகி வழங்கும். இனி, அண்மையிலிருப்பவன் என்று பொருள்படும் அமாத்ய என்னும் வடசொல்லொடு தொடர்புடையதாகக் கொள்ளினும், அப் பொருளிலும் இச்சொல் தென்சொல்லாதற்கு எத்துணையும் இழுக்கில்லை யென்க. அமைதல் நெருங்குதல், அமை நெருக்கம். அமை - அமைச்சன். ஒ.நோ. தலை - தலைச்சன், உழையிருந்தான் என்று திருவள்ளுவருங் கூறுதல் காண்க (638), - அமைச்சன் அமாத்ய (வ.). (தி.ம. 736.) அபர் அயர்-ஹய் அயர்தல் = தளர்தல், கொண்டாடுதல், வடசொற்பொருளும் இவையே. (வவ.75) அர் அர் (அறுத்தற் கருத்து வேர்) உல் - உர் - அர், உர் - உர - உரவு - உரசு - உரைசு - உரைஞ்சு; உரசு - உரோசு - உரோஞ்சு, உர் - உரி - உரிஞ் - உரிஞ்சு. உர உரை - உராய், ரகர றகரம் இரண்டனுள்ளும் காலத்தால் முந்தியது ரகரமே. அதன் வல்வடிவே றகரம். றகரம் தோன்றாத முதுபண்டைக் காலத்தில், ரகரமே அதன் தொழிலை ஆற்றி வந்தது. எ-டு; முரிதல் - முறிதல் = வளைதல். முரிந்து கடை தெரிய வரிந்தசிலைப் புருவமும் மணி 18:161) பார் = பாறை. இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். (குறள். 1068) இவ்வெடுத்துக்காட்டுக்கள் பிற்காலத்து நூலினவாயினும், சொல்லளவில் முற்காலத்தனவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/207&oldid=1431705" இலிருந்து மீள்விக்கப்பட்டது