பக்கம்:தேவநேயம் 1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவாணர் 191 அறுத்தல் என்னும் பொருளில் முதற்காலத்தில் வழங்கிய சொல் 'அர்' என்பதே. அது பிற்கால மொழி நிலையில், ரகார ழகாரம் குற்றொற் றகா (தொல். 49) என விலக்கப்பட்டது. அர் - அரம் = அராவும் இருப்புக்கருவி அர் - அரா - அராவு. அராவுதல் = அரத்தால் அறுத்துத் தேய்த்தல். அரம் - அரம்பு - அரம்பம் = மரமறுக்கும் ஈர்வாள். Te. rampamu. அரம்பு - அரம்பணம் = வெற்றிலை நறுக்கும் கருவி, அர - அரம்போற் கூரிய பல்லையுடைய பாம்பு. அர - அரா. அர - அரவு - அரவம் = பாம்பு. அரங்குதல் = 1. அறுபடுதல். 2. அம்பு போல் தைத்தல். அம்பு .. அரங்கி முழுக (சீவக 293) 3. அழுந்துதல் (உரி. நி.) 4. தேய்தல் 5. வருந்துதல், அரக்கர்கண் அரங்க (கம்பரா. மூல. 81 6. உருகுதல், செம்பை அரங்கவை (உலக வழக்கு) 7. அழிதல். அரக்கரங் கரங்க (திவ். திருச்சந். 32 அரங்கு = 1, (அறுக்கப்பட்ட கட்டடப்பகுதியாகிய) அறை, அவ்வீடு அரங்கரங்காகக் கட்டப்பட்டுள்ளது உலக வழக்கு) 2. அறைபோன்ற நடன அல்லது நாடகமேடை 3. நாடகசாலை 4. சொற்பொழிவு அல்லது நூலுரைப்பு மேடை 5. அவை 6. பாண்டி அல்லது சில்லாக்கு என்னும் விளையாட்டிற்குக் கீறிய கட்டம். 7. கவறாட்டிற்கு வரைந்த கட்டம் 8. கவறாடும் இடம். அரங்கு - அரங்கம் = 1, நாடக சாலை, ஆடம்பலமும் அரங்கமும் (சீவக. 2119)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/208&oldid=1431706" இலிருந்து மீள்விக்கப்பட்டது