பக்கம்:தேவநேயம் 1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 2.கவறாடும் இடம் (பிங்) 3. படைக்கலம் பயிலும் இடம் (சூடா.) 4. போர்க்களம் (திவா.) 5.அவை (திவா 6. ஆற்றிடைக்குறை. தேவநேயம் ஆற்றுவீயரங்கத்து (சிலப். 10 : 156) 7.திருவரங்கம் (திவ். பெரியதி, 5, 7,1). அரங்கம்- Skt. ranga. ஆற்றிடைக் குறைகட்கெல்லாம் பொதுப்பெயரான அரங்கம் என்னும் சொல், திருவரங்கத்திற்குச் சிறப்புப் பெயராயிற்று. ஆற்று நீரால் அறுக்கப்பெற்ற திட்டு அல்லது தீவு என்பது அதன் பொருள். அரங்கன் = அரங்க நாயகனான திருமால். "அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடேன்'" என்றார் பிள்ளைப் பெரு மாளையங்கார். திருவரங்கம் என்பது பிற்காலத்தில் ஸ்ரீரங்கமென வடமொழியில் திரிந்தது. அரங்கு - அரக்கு (பி.வி.) அரக்குதல் = 1. தேய்த்தல். கண்ணரக்கல் (சினேந். 456) 2.சிதைத்தல் (சூடா) 3. அழுத்துதல். விரலால் தலையரக்கினான் (தேவா. 223:11) 4. வருத்துதல், எல்லரக்கும்... இராவணன் கேம்பரா. ஊர்தேடு. 2301 5.கிளைதறித்தல். 6.வெட்டுதல். தாளும் தோளும் அரக்கி விநாயகபு, 42:4) 7.குறைத்தல். அர் காரரக்கும் கடல் (தேவா. 46: 88) 8. முழுதுமுண்ணுதல். அரக்கு - அரக்கன் = அழிப்பவன். அரப்பு = அழுக்குத் தேய்க்கும் கட்டி அல்லது தூள். அரம்பு = குறும்பு. அரம்பன் = குறும்பன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/209&oldid=1431709" இலிருந்து மீள்விக்கப்பட்டது