பக்கம்:தேவநேயம் 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

198 தேவநேயம் அரக்கு மரங்க ளுள் அரசுபோல் உயர்ந்த து அரசு (Ficus religiosa). அரச இலைபோல் குலைக்காய் வடிவுள்ள (cordate) இலைகளை யுடையதாய்ப் பூவோடு கூடியது பூவரசு. (ஒ.மொ) அரக்கு அரக்கு - ராக்ஷா ம. அரக்கு , க., து. அரகு, எல் = கதிரவன். எல்-எர்-எரி = நெருப்பு, சிவப்பு, எர்-எருவை = குருதி, செம்பு, செம்பருந்து, எர்-இர்-இரத்தி = செம்பழ இலந்தை, இர்-அர்-அரன், அரக்கு, அரத்தம், அருணம், அரக்கு = இங்குலிகம், சிவப்பு, அரக்கு - அரக்கம் = அவலரக்கு (பதிற்றுப். 30:27). அரக்காம்பல், அரக்குச் சாயம், அரக்கு மஞ்சள் என்பன செந்நிறப் பொருள்களைக் குறித்தல் காண்க. (வவ75) அரசச் சின்னங்கள் அரசர்க்கு அவர் தகுதிக்கேற்பப் பல அடையாளங்கள் உள. அவை அரசச் சின்னங்கள் எனப்பெறும். அவை, குலம், பெயர், முடி, கோல், மாலை, கட்டில், குடை கொடி முத்திரை, முரசு, கடிமரம், குதிரை, யானை, தேர், மனை எனப் பதினைந்து வகைய. இவற்றுள் முடியொன்றும் மூவேந்தர்க்குச் சிறப்பு என்றும், பிறவெல்லாம் முத்திற வரசர்க்கும் பொதுவென்றும், கூறுவது மரபு. (1) குலம் : மூவேந்தரும், கதிரவன் திங்கள் நெருப்பு ஆகிய முச்சுடரைத் தங்குல முதலாகக் கூறி வந்தனர். பாண்டியர் திங்கட் குலம்; சோழர் கதிரவக்குலம்; சேரர் தெருப்புக்குலம். (கடலுள் மூழ்கிய குமரி நாடாகிய பாண்டி நாட்டில் கதிரவன் கழி பெருங் கடுமையாய்க் காய்ந்து மக்கள் திங்களையே விரும்பும்படி செய்ததனால், பாண்டியர் தம்மைத் திங்கள் வழியினராகவும், குணபுலமாகிய சோழநாடு கதிரவன் எழுந்திசையிலிருந்ததால், சோழர் தம்மைக் கதிரவன் வழியினராகவும் மலை நாடாகிய சேர நாட்டில் மூங்கிலும் பிறவும் ஒன்றோடொன்றுரசி அடிக்கடி பெருநெருப்புப் பற்றியதால், சேரர் தம்மை நெருப்பு வழியின ராகவும் கூறிக்கொண்டதாகத் தெரிகின்றது. குமரி நாட்டு வெப்பத்தினாலேயே, வேனில் இன்னிழல் தரும் வேம்பின் பூமாலையை அடையாள மாலையாகவும், நீர் வாழ் மீன் வடிவை முத்திரையாகவும், பாண்டியன் கொண்டான்போலும்!) (2) பெயர்: அரசர் பெயர்கள், குடிப்பெயர், இயற்பெயர், பட்டப்பெயர், விருதுப்பெயர், சிறப்புப்பெயர், உயர்வுப்பெயர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/215&oldid=1431785" இலிருந்து மீள்விக்கப்பட்டது