பக்கம்:தேவநேயம் 1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

200 தேவநேயம் அரசச் சின்னங்கள் என்பது இறந்து போன அரசனுக்கும்; வழங்கிய உயர்வுப் பெயர்களாம். வரிசைப் பெயராவது அரசனின் தரத்தைக் குறிக்கும் பெயர். வேள், மன்னன், கோவன் (கோன், கோ), வேந்தன் என்பன வரிசைப் பெயராம். திணைநிலைப் பெயராவது, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்திணை பற்றிய பெயர். வெற்பன், கானக நாடன், ஊரன், துறைவன், விடலை முதலியன திணைநிலைப் பெயராம். இவை பெரும்பாலும் குறுநில மன்னர்க்கு வழங்கும். இயனிலைப் பெயராவது ஏதேனும் ஓர் இயல் பற்றி வழங்கும் பெயர், செம்மல், வள்ளல் முதலியன இயனிலைப் பெயராம். தமிழகம் முழுவதையும் அடிப்படுத்திய பிற்காலச் சோழப் பேரரசர். 'மும்மடிச் சோழன்', 'மும்முடிச் சோழன்', 'திரிபுவன தேவன்', 'திரிபுவனச் சக்கரவர்த்தி' முதலிய கொற்றப் பெயர்களைக் கொண்டிருந்தனர். தமிழகத்தோடு பிற நாடுகளையும் வென்ற சோழ பாண்டியப் பேரரசர். 'எல்லாந்தலையான பெருமாள்', 'சகல புவனச் சக்கரவர்த்தி', 'இராசராசன்', 'இராசாக்கள் தம்பிரான்' முதலிய கொற்றப் பெயர்களையும்; 'எம் மண்டலமுங் கொண்ட ருளின' என்பது போன்ற கொற்ற அடைமொழிகளையும் கொண்டிருந்தனர். அரசர் போன்றே அரசியரும் பெயரால் பெருமை குறிக்கப் பெற்றனர். அரசனுடைய பட்டத்துத் தேவிக்குக் கோப்பெருந்தேவி அல்லது பெருங்கோப்பெண்டு என்பது வரிசைப் பெயராக வழங்கிற்று. ஒரே பெருநாட்டரசன் தேவிக்கு 'உலக முழுதுடையாள்', 'அவனி முழுதுடையாள்,' 'உலக மகாதேவி' முதலிய பெயர்களும்; முப்பெருநாட்டுப் பேரரசன் தேவிக்கு 'மூவுலகுடையாள்,' 'திரிபுவன மகாதேவி,' முதலிய பெயர்களும்; பல்பெருநாட்டுப் பேரரசன் தேவிக்கு 'ஏழுலகுடையாள்' என்னும் பெயரும்; கொற்றப் பெயராக வழங்கிவந்தன (3) முடி : முடி என்பது மகுடம். தமிழகம் முழுவதும் நிலையாக மூவேந்தர் ஆட்சிக்குட்பட்டிருந்த பழங்காலமெல்லாம், அம்மூவர்க்கே முடியணியும் உரிமையிருந்தது. பிற்காலத்தில் மூவேந்தருக்கடங்காத உள் நாட்டுச் சிற்றரசரும் முடியணிந்து கொண்டனர். முடி சூடியர் அல்லாத அரசர் பட்டங்கட்டியர் ஆவர். ஓர் அரசன் பிற அரசரை வென்றபின், அவர் முடிபோற் செய்த பொன்னுருக்களை மாலையாகக் கோத்து அணிந்து கொள்வ துண்டு. செங்குட்டுவனும் அவன் முன்னோரும், சோழ பாண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/217&oldid=1431787" இலிருந்து மீள்விக்கப்பட்டது