பக்கம்:தேவநேயம் 1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசச் சின்னங்கள் பாவாணர் 201 யரையும் ஐம்பெரு வேளிரையும், வென்றமைக் கறிகுறியாக, எழுமுடி மாலையொன்றணிந்திருந்தனர். ஆளும் அரசனைப்போல் இளவரசனும் முடியணிந்திருந்தான். ஆயின் அரசன்முடி நீண்டு குவிந்தும், இளவரசன் முடி குட்டை யாகவும் இருந்த அதனால், பின்னது மண்டை எனப்பட்டது. (4) கோல் : கோல் என்பது, அரசன் அதிகார முறையில் வீற்றிருக்கும்போதும் செல்லும் போதும் கையிற் பிடித்திருக்கும் தண்டு, அது மணியிழைத்து ஓவிய வேலைப்பாடமைந்த பொற்றகட்டால் பொதியப் பெற்றிருப்பது. கோல் ஆட்சிக் கறிகுறியாதலால், அரசனுடைய ஆட்சி நேர்மையானதாயிருக்க வேண்டுமென்பதைக் குறித்தற்கு, அது நேரானதாகச் செய்யப் பட்டிருக்கும். அதனால் அதற்குச் செங்கோல் என்று பெயர். செம்மை - நேர்மை. கொடுமையான ஆட்சி கொடுங்கோல் என்னும் பெயராற் குறிக்கப்படும். கொடுமை - வளைவு. ஆட்சியின் நேர்மையாவது அறநெறிவழி நேரே செல்லுதல்; அதன் கொடுமையாவது அறநெறியினின்று திறம்பி வளைதல். (5) மாலை : மாலை என்பது அடையாள மாலை, பாண்டிய னுக்கு வேப்பமாலையும், சோழனுக்கு ஆத்தி மாலையும், சேரனுக்குப் பனம்பூமாலையும், அடையாள மாலையாம். குறுநில மன்னர்க்கும் ஒவ்வோர் அடையாள மாலையிருந்தது. ஆய் அண்டிரனுக்குச் சுரபுன்னை மாலையும், ஏறைக்கோனுக்குக் காந்தள் மாலையும், அடையாள மாலையாக இருந்தன. (6) கட்டில், கட்டில் என்பது இருக்கை. அரசனது கட்டில் அரசுகட்டில் என்றும் அரசிருக்கை என்றும் அழைக்கப்பெறும். அதன் கால்கள் அரி (சிங்க) வடிவாய் அமைந்திருந்ததனால், அதற்கு அரியணை (சிங்காசனம்) என்றும் பெயர். தலைநகரிலும் பிற பாடி வீடுகளிலும் அரசனுக்கு அரியணையுண்டு. தலை நகரில், அரசன் அரசு வீற்றிருக்கும் ஓலக்கமண்டபத்திலும் (Durbar Hall), அமைச்சரொடு சூழும் சூழ்வினைமண்டபத்திலும், அறங்கூறும் மன்றத்திலும், ஒவ்வோர் அரியணையிருக்கும். அரியணைகட்குச் சிறப்புப்பெயரிட்டு வழங்குவது மரபு, சடாவர்மன் குலசேகரபாண்டியனுக்கு, மதுரையில் 'மழவராயன்' 'கலிங்கராயன்' 'முனையதரையன்' என மூவரியணைகளும்; விக்கிரமபாண்டியனுக்கு, மதுரையில் 'முனைய தரையன்' என்னும் அரியணையும், இராசேந்திரத்தில் 'மலையதரையன்' என்னும் அரியணையும், இருந்தன. (7) குடை : குடை என்பது, அரசன் குடிகளைத் துன்பமாகிய வெயிலினின்று காத்து, அவர்கட்கு இன்பமும் பாதுகாப்புமாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/218&oldid=1431788" இலிருந்து மீள்விக்கப்பட்டது