பக்கம்:தேவநேயம் 1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

226 தேவநேயம் அரசிய லுறுப்புகள் முத்தமிழ் நாடுகளுள் அடங்கிய உள்நாடுகளை வெவ்வேறு சிற்றரசரும் துணையரையரும் (Viceroys) ஆண்டு வந்தனர். தலைமையரசர் வலிகுன்றிய போது, அதிகார வாசைமிக்க சிற்றரச ரும் துணையரையரும் தனியரசராகி விடுவது வழக்கம். இவ்வகை யில், சேரநாட்டினின்று கொங்குநாடும், சோழநாட்டி னின்று தொண்டைநாடும், பிரிந்து போயின. பிற்காலத்துப் பேரரசர் தம் பெருவலியால் அவற்றை மீள அடிப்படுத்தினும், அவை வெல்லப் பட்ட புறநாடுகள் போல் கருதப்பட்டனவே யொழிய, பண்டு போல் சேரசோழ நாட்டுப்பகுதியான உள்நாடாகக் கருதப்பெற வில்லை. ஆயினும், தமிழகத்தை 'வண்புகழ் மூவர் தண்பொழில்' என்று கூறும் இலக்கிய மரபு தெடுகலும் இருந்துவந்தது. பாண்டி நாட்டின் பெரும்பகுதியைச் சிறிதும் பெரிதுமாய்ப் பன் முறையிற் கடல்கொண்டு விட்டதனாலும், சேர சோழ நாடுகளின் எல்லைப் புறத்துச் சிற்றரசர் அடிக்கடி தனியரசராகிக் கொண்டும் தம் நாட்டை விரிவுபடுத்திக் கொண்டும் இருந்ததினாலும், தமிழகத்தின் வடகோடியும் வடமேற்குப் பகுதியும் மொழிபெயர் தேயமாகத் திரிந்து வந்ததினாலும், கடைச்சங்கக் காலத்திற்குப் பின் முத்தமிழ் நாடுகளும் மிக ஒடுங்கி விட்டன. சேரநாட்டின் வடபாகத்தைச் சேர்ந்த கருநாடும் கங்கமும் கட்டியமும், 9 ஆம் நூற்றாண்டிலேயே முழுக்கன்னட நாடாகி, 11 ஆம் நூற்றாண்டில் ஹொய்சள ஆட்சிக்குட்பட்டுவிட்டன. 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த விஷ்ணுவர்த்தனன் என்னும் ஹொய்சள மன்னன். கேரள (சேரல) அரசனை வென்று நீலமலையைக் (Nilgris) கைப்பற்றிக் கொண்டதாக அவன் கல்வெட்டுக் கூறுவதால், சேரநாட்டின் வடவெல்லை 12 ஆம் நூற்றாண்டில் மிகத்தெற்கே தள்ளி விட்டதென அறியலாம். கொங்குநாடு, மூவேந்தரும் முட்டிப் பொருங்களமாயிருந்து, ஒரு நிலையிலில்லாமல், அடிக்கடி அம் மூவருள்ளும் ஒருவர் கையினின்று ஒருவர் கைக்குக் கடந்து கொண்டும் எல்லைமாறிக் கொண்டும் இருந்ததினால், ஒரு தனி நாட்டிற்குரிய தன்மையை முற்றும் இழந்துவிட்டது. அதனால், 3 ஆம் குலோத்துங்கச் சோழன் (1178-1218) அவைக்களப் புலவராயிருந்த கம்பர், சேர சோழ பாண்டி தொண்டை நாடுகளின் எல்லைகளை மட்டும் பின்வருமாறு பாடியுள்ளார். வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம் பாண்டிநாட் டெல்லைப் பதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/243&oldid=1431812" இலிருந்து மீள்விக்கப்பட்டது