பக்கம்:தேவநேயம் 1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசியல் வினைஞர் பாவாணர் 229 தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ பாமுறைதேர் வள்ளுவர்முப் பால் என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுளை யொட்டி, பெயர், மலை, நாடு, ஆறு, நகர், முரசு, தமிழ், கொடி, குதிரை, மாலை என்னும் பத்தும் அரசவுறுப்புக்கள் எனக் கூறுவர். பாட்டியல் இலக்கணியர், இவற்றுள் பெயர் தமிழ் என்னும் இரண்டை நீக்கி, அவற்றுக்குப் பதிலாக, யானை ஆணை என்னும் இரண்டைச் சேர்ப்பர். இவ்விரு சாராரும் கூறுபவற்றுள் பெரும்பாலன அரசச்சின்னங் களும் ஆள்நிலப் பகுதிகளுமாதலின், அவை இற்றை அரசியல் நூற்படி அரச வுறுப்புக்களாகா என அறிக. (பதஆ.) அரசியல் வினைஞர் முத்தமிழ் நாட்டிலும், அரசியல் வினைஞர், பெருநாட்டுத் தலைநகர் சிறுதாட்டுத் தலைநகர் கள் ஊர்கள் ஆகிய மூவகை யிடங்களில் சிதறியிருந்தனர். (1) பெருதாட்டுத் தலைநகரிலிருந்த வினைஞர் : அரசனுடைய ஆட்சிக்கு அடிப்படைத் துணையாயிருந்த அதிகாரச்சுற்றம் ஐம்பெருங்குழு என்பது, அமைச்சர், புரோகிதர், படைத் தலைவர், தூதர், ஒற்றர் என்னும் ஐந்து குழுவாரின் பெருந்தொகுதியே ஐம்பெருங்குழுவாகும். தலைமையமைச்சனுக்கு உத்தர மந்திரி அல்லது மகாமந்திரி என்று பெயர், தூதர், (தூதுவர்) அரசன் விடுத்த செய்திகளைப் பிற அரச ரிடத்துக் கொண்டு செல்பவரும், அரசனுடைய ஆணைகளை நாட்டதி காரிகளிடத்தும் ஊரதிகாரிகளிடத்துங் கொண்டு செல்பவரும் என இரு பாலர், அரச தூதர் சட்டையுந் தலைப் பாகையு மணிந்திருப்பர். அதனால் அவர்க்குக் கஞ்சுகமாக்கள் என்றும், சட்டையிட்ட பிரதானிகள் என்றும் பெயர். தலைமைத் தூதன் கஞ்சுகமுதல்வன் எனப்படுவான். சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற கஞ்சுக முதல்வர் ஈரைஞ் நூற்றுவர் என்று சிலப்பதிகாரங் கூறுவதால் (26; 137-8), தூதர் பெருந் தொகையினராயிருந்தனர் என்பதறியப்படும். ஐம்பெருங் குழுவிற்கு அடுத்தபடியாய், அதனினுஞ் சற்று விரிவாக இருந்த அதிகாரச்சுற்றம் எண்பேராயம் என்பது, கரணத்தியலவர் (கணக்கர்), கரும விதிகள் (அரசாணையை நிறைவேற்றும் அதிகாரிகள், ) கனகச் சுற்றம் (பண்டாரம் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/246&oldid=1431815" இலிருந்து மீள்விக்கப்பட்டது