பக்கம்:தேவநேயம் 1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

232 தேவநேயம் அரசியல் வினைஞர் கணக்கெழுதுபவனுக்குத் திருமுகக்கணக்கு என்றும் பெயர். அரண்மனை வேலையாட்கள் அகப்பரிவாரம் என்றும், அரசனொடு நெருங்கிப் பணிசெய்வார் அணுக்கச் சேவகம் என்றும், அரசனுக்குப் பக்கத்தில் நின்று ஏவல் கேட்போர் உழைச்சுற்றாளர் என்றும், அழைக்கப்பெறுவர். அரசனுக்குக் கவரி ஆலவட்டம் முதலியன வீசுவாரும், குடைகொடி முதலியன பிடிப்பாரும், அடையாளக்காரர் எனப்படுவர். அரசனுக்கு ஊக்கமும் மறமுங் கிளருமாறு, அவனுடைய முன்னோரின் அருந்திறற் செயல்களை எடுத்துக் கூறி, அவன் குடியைப் புகழ்வதற்கு, ஓவர் அல்லது ஏத்தாளர் என்று சொல்லப் படும் பாடகர் பலரிருந்தனர். அவர் சூதர் மாகதர் வேதாளிகர் (வைதாளிகர்) எனப் பல்வகையர். சூதர் நின்றேத்துவார் என்றும், மாகதர் இருந்தேத்துவார் என்றும் சொல்லப்படுவர். வைகறையில் அரசன் பள்ளியறைக்குப் புறம்பே நின்று, அவன் குடியைப் புகழ்ந்து பாடி, அவனை இனிதாகத் துயிலுணர்த்துபவர் சூதர் ஆவர். இங்ஙனம் பாசறையில் அரசனைத் துயிலுணர்த்துபவரை, அகவர் என்று மதுரைக் காஞ்சி கூறும். அரசனுடைய ஆணைகளை அவ்வப்போது காளமூதிப் படை கட்குத் தெரிவிப்பவன் படையுள்படுவோன் அல்லது சின்னமூதி எனப்படுவான், அவனுக்குப் படைக்கிழவன் சிறுக்கன், படைச் சிறுக்கன், படைச்சிறுபிள்ளை என்றும் பெயருண்டு. அரசன் அரண்மனைக்கு வெளியே நகரிலும் நாட்டிலும் செல்லும் போதெல்லாம், அவனுடைய பரிவாரத்திற்கு முன் சென்று, அவன் வருகையைக் கூறி மக்களை வழியினின்றும் விலக்குபவனுக்குக் கட்டியங்காரன் (Herald) என்று பெயர். அரசன் தலைநகரிலிருக்கும் போதும் நாடுகாவன் மேற்செல்லு மிடத்தும், அவனொடு கூடவேயிருக்கும் அரசியல் வினைக் கூட்டத்தார்க்கு, உடன் கூட்டம் என்றும் உழையர் என்றும் பெயர். அவருள் அதிகாரிகளாயிருப்பார் உடன் கூட்டத்ததி காரிகள் எனப்படுவர். வினையாற்றும் வேளையில் அரசனைச் சூழ்ந்திருக்கும் பரிவாரம், ஏவற்பரிவாரம் காவற்பரிவாரம் வினைப்பரிவாரம் என முத்திறப்பட்டிருக்கும். அரசியல், அல்லது அரண்மனைத் தொடர்பான, உணவு உடை உறையுள் உண்கலம் அணிகலம் ஊர்திகள் தட்டுமுட்டுக்கள் முதலிய பல்வகைப் பொருள்களையும், பணியாட்களைக் கொண்டு ஆக்குவித்து அரசாணையை நிறைவேற்றும் தலைவர், பொதுவாகக் கருமிகள் அல்லது கன்மிகள் என அழைக்கப் பெறுவர். இவர் ஆக்கவினைத்துறையர். இவரை ஏவி நடத்துவோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/249&oldid=1431818" இலிருந்து மீள்விக்கப்பட்டது