பக்கம்:தேவநேயம் 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசியல் வினைஞர் பாவாணர் 231 களைக் கேட்டெழுதும் அதிகாரச் சுற்றத்திற்கு வாயிற் கேட்போர் (Secretarial Staff) என்றும், அரசவாணைக்கு வாய்க் கேள்வி என்றும், இதை நிறைவேற்றுவோர்க்கு வாய்க் கேள்வியர் என்றும், பெயருண்டு. நாள்தோறும் நிகழும் அரசியல் நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிப் புத்தகத்தில் எழுதி வைப்பவன் பட்டோலைப் பெருமான் எனப்படுவான். ஊர்ச்சபைகளினின் றும் நாட்டதிகாரிகளிடத்திருந்தும் வரும் ஓலைகளைப் படித் தறிந்து, அவற்றிற்குத் தக்க விடைகளை யெழுதித் தூதர் வாயிலாய் விடுப்போர்க்கு விடையில் என்றும், அவர் தலைவனுக்கு விடையதிகாரி என்றும் பெயர். ஊர்களிலும் தலைநகரிலும் தண்டப்பட்டு வந்த வரித் தொகை களைக் கணக்கிற் பதிந்து கொள்வோர், வரியிலார் எனப்படுவர். பதிந்து கொள்ளப்பட்ட வரித்தொகையை, இன்னின்ன செல விற்கு இவ்வளவிவ்வளவென்று கூறு செய்வோர்க்கு வரிக்கூறு செய்வார் என்று பெயர். ஒவ்வோர் ஊரினின்றும் அரசனுக்கு வரவேண்டிய காணிக்கடன் என்னும் நிலவரிக்குக் கணக்கு வைப் போர் வரிப்பொத்தகம் என்றும், அவர் தலைவன் வரிப் பொத்தகக் கணக்கு என்றும், பெயர் பெறுவர். நிலவரி நீங்கிய இறையிலி நிலங்களினின்றும் ஊர்களினின்றும் வரவேண்டிய பிறவரிகட்குக் கணக்கு வைப்போர், புரவுவரி எனப்படுவர். அவர் தொகுதி புரவுவரித் திணைக்களம் எனப்படும். அத் திணைக் களத் தலைமைக் கணக்கனுக்குப் புரவுவரிச்சீகரணம் என்றும், அதன் தலைவனுக்குப் புரவுவரித் திணைக்கள நாயகம் என்றும், பெயர், இவரல்லாது, வரியிலீடு என்றும், புரவுவரித் திணைக்கள முகவெட்டி என்றும், இருவரி யதிகாரிகள் இருந்தனர். சேரநாட்டு அரசிறையதிகாரி பாட்டமாளன் என்றும், அரசியற் கணக்கதிகாரி மேலெழுத்துக் கணக்கு என்றும், பெயர் பெற்றிருந்ததாகத் தெரிகின்றது. அத்தாணிமண்டபத்திலும் அரண்மனையிலும், அவ்வப்போது நாழிகையறிந்து அரசனுக் கறிவிப்பவர், நாழிகைக் கணக்கர் எனப்படுவர். மணநாள் திருநாள் பொருநாள் ஆகிய மூவகைப் பெருநாளிலும், யானைமேலேறி முரசறைந்து அரசவாணையை நகரத்தார்க் கறிவிப்பவன் வள்ளுவன் என்றும், அரசர்க்குரிய வேத்தியற் கூத்தை யாடுபவன் சாக்கையன் என்றும், கூறப்படுவர். திவாகரம் இவ்விருவரையும் உள்படுகருமத்தலைவர் என்று இணைத்துக் கூறும். சாக்கையனுக்குக் கூத்துள்படுவோன் என்றும் பெயருண்டு. அரண்மனைக் காரியங்களை மேற்பார்ப்பவனுக்கு மாளிகை நாயகம் (Seneschal or Chamberlain) என்றும், அரண்ம னைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/248&oldid=1431817" இலிருந்து மீள்விக்கப்பட்டது