பக்கம்:தேவநேயம் 1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

234 தேவநேயம் அரசியல் வினைஞர் வாரியம், பொன்வாரியம், பஞ்சவாரவாரியம் என்னும் ஐந்தே. ஆட்டை வாரியத்திற்கு ஊர்வாரியம் தருமவாரியம் என்றும் பெயருண்டு. கழனி மிகுதியா யில்லாவிடத்துத் தோட்ட வாரியமே கழனிகளையும், ஏரி குளங்கள் பலவா யில்லாவிடத்து ஏரிவாரி யமே கலிங்குகளையும் கவனித்துக் கொள்ளும். ஒவ்வொரு வாரிய மும், தனித்தனி சபை அல்லது சிறுகுறி என்றும், எல்லா வாரியமும் சேர்ந்து மகாசபை அல்லது பெருங்குறி என்றும், கூறப்பெறும். ஊர்ச்சபைக் கணக்கெழுதுபவன் கரணத்தான் (மத்தியஸ்தன்) எனப்படுவான்; கணக்கு மிகுதியாயில்லாத சிற்றூர்களில் கணக்கு வாரியம் இருந்திராது. ஊரைக் காவல்செய்பவர்க்குப் பாடிகாவல் என்று பெயர். தலைமைக் காவலனைப் பெரும்பாடிகாவல் அல்லது தலையாரி என்றும், அவனுக்குக் கீழ்ப்பட்டவரைச் சிறுபாடி காவல் என்றும், கூறுவது வழக்கம். கொடிக்கால்கள் தோட்டந்தோப்புகள் ஆகியவற்றின் வேலிகளைக் கவனித்தற்கு, வேலிதாயகம் என்றோர் அலுவலாளன் இருந்தான். ஊர்ச்சபை வேலைக்காரனுக்கு வெட்டி (வெட்டியாள் வெட்டி யான்) என்று பெயர், 'ஊராளி' என்று இலக்கியத்திலும், 'ஊராளன்' 'ஊருடையான்' 'ஊர்மேல் நின்ற திருவடிகள்' என்று கல்வெட்டிலும், வந்திருப்பதால், ஓரிரு பெருநாடுகளில் ஒவ்வொர் ஆள்நில ஊருக்கும் ஓர் அரசியலதிகாரியுமிருந்ததாகத் தெரிகின்றது. தனியூர்களில் ஒருவகையான நகரங்களில், நகரமக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற நகரத்தார் என்னுஞ் சபையார் இருந்தனர். (4) பெருநாடெங்குமிருந்த வினைஞர் : தலைநகரிலும், பேரூர் களிலும், வழக்காளிகளின் வழக்கைக் கேட்டு முறை செய்ய அறங் கூறவையமும்; எல்லா ஆள்நில ஊர்களிலும், ஆவணங்களைக் காப்பிடுவதற்கு ஆவணக்களரியும் இருந்தன. அறங்கூ றவையத் திற்கு, அறக்களம், மன்றம், தருமாசனம், நியாயசபை என்றும்; அதன் உறுப்பினர்க்கு, அறக்களத்தார், மன்றத்தார், தருமாசனத் தார், நியாயத்தார் என்றும்; பெயருண்டு. ஆங்காங்குள்ள ஊட்டுப்புரை மடம் மருத்துவசாலை முதலிய அறநிலையங்களை மேற்பார்த்தற்கு, தனித் தனிக் குழுவார் அமர்த்தப்பெற்றிருந்தனர். அவருக்கு அறப்புறங்காவலர் என்றும், புண்ணியக்கணப்பெருமக்கள் என்றும் பெயர். பொற்காசுகளையும் காசாக வழங்கின பொற்கட்டிகளையும், நிறுத்தும் உரைத்தும் நோட்டஞ்செய்யவும், சரியானவற்றின் மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/251&oldid=1431820" இலிருந்து மீள்விக்கப்பட்டது