பக்கம்:தேவநேயம் 1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசு வகைகள் பாவாணர் 235 முத்திரையிடவும், வண்ணக்கர் என்னும் அலுவலாளர் எல்லாப் பேரூர்களிலுமிருந்தனர். அரசிறையும் பிறவரிகளும் தண்டுவதற்கு ஊர்தொறும் தண்டு வான் (தண்டலாளன்) என்னும் அரசியல் வினைஞன் இருந்தான். வரி செலுத்தாத குடிகளைத் துன்புறுத்தித் தண்டு பவனுக்குப் பேறாளன் என்று பெயர். (5) வேறு சில வினைஞர் : வினையறியப்படாத சில அரசியற் பதவியாளரும் அலுவலாளரும் அதிகாரிகளும், கல்வெட்டிற் குறிக்கப்பட்டுளர். அவர், அரைசுமக்கள், முதலிகள், பழநியா யம், தெரிப்பு, முகவெட்டி.பெரும்பணைக்காரன், (நடுவிருக்கை என்பவன், அறங்கூறவையத்தானாய், அல்லது கரணத்தானாய் இருக்கலாம்) நடுவிருக்கை, சிறுதனம், பெருந்தனம், சிறுதரம், பெருந்தரம், பெருந்தரத்துக்கு மேல்நாயகம் (சிறுதரம் என்பவன் நாட்டதிகாரியாகவும், பெருந்தரம் என்பவன் வளநாட்டதி காரியாகவும், பெருந்தரத்துக்கு மேல் நாயகம் என்பான் வளநாட்டதிகாரிகள் தலைவனாகவும் இருந்திருக்கலாம்.) முதலியோராவர். பெருங்கோயிலுள்ள இடமெல்லாம், அதைமேற்பார்த்தற்கு ஒரு தனிக்குழு இருந்தது. ப.த.ஆ. அரசு வகைகள் 1. ஒருவராட்சி அ. தாயாட்சி - Matriarchy ஆ. தந்தையாட்சி - Patriarchy இ. நாட்டாண்மை - City State ஈ. தேவாட்சி - Theocracy உ. கோவரசு - Monarchy: அ. தன்ன ரசு - Autocracy ஆ. தன்மூப்பாட்சி - Dictatorship இ. அமைச்சரசு - Limited monarchy ஈ. பாராளுமன்றக் கோவரசு - Parliamentary Monarchy 2. பலராட்சி அ. குருக்களாட்சி - Hierocracy ஆ. சீரியோராட்சி - Aristocracy அ. சிலராட்சி - Oligarhcy ஆ. பலராட்சி - Polyarchy இ. செல்வராட்சி - Plutocracy ஈ. படையாட்சி - Stratocracy

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/252&oldid=1431821" இலிருந்து மீள்விக்கப்பட்டது