பக்கம்:தேவநேயம் 1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

236 தேவநேயம் அரகறுப்பு 3. குடியாட்சி- Democracy அ. மக்களாட்சி - Republic அ. ஒற்றையாட்சி - Unitary Govemment ஆ. கூட்டாட்சி - Federal Government ஆ. கூட்டுடைமை - Socialism இ.பொதுவுடைமை - Communism ஈ. கட்டுடைமை - Fascism உ. உழைப்பாளராட்சி - Ergatocracy ஊ, மன்பதாட்சி - Mobocracy Ochlocracy எ. அனைவராட்சி - Pantisocracy அரசுகளெல்லாம் கீழ் வருமாறு வெவ்வேறு வகையில் இவ்விரு திறப்படும். 1. செங்கோலாட்சி Benign Govt. + கொடுங்கோலாட்சி Despotic Government 2. தன்னாட்சி Home Rule x வேற்றாட்சி Xenocracy 3. ஒருவராட்சி Monocracy x பலராட்சி Polyarchy 4. பேரரசு Imperialism x சிற்றரசு Feudalism 5. பாராளுமன்ற ஆட்சி (Parliamentary Govt.) அல்லாட்சி (NonParliamentary Govt.) 6. ஆடவராட்சி Androcracy x பெண்டிராட்சி Gynecocracy Gynocracy. 7. முதலாளியர் ஆட்சி Capitalistic Govt. x தொழிலாளியர் Proletarian Govt. (தி.தம்) அரசுறுப்பு பல்வகைக் குடியரசு தோன்றியுள்ள இக்காலத்து அரசியல் நூலார். அரசியலமைப்பில் தாட்டை (State) உடம்பாகக் கொண்டு ஆள் நிலம் (Territory), குடிகள் (Population), அரசு (Government), கோன்மை (Sovereignty), ஒற்றுமை (Unity) என்னும் ஐந்தை அதன் உறுப்பாக்குவர். செங்கோல் அல்லது கொடுங்கோல் கொண்ட கோவரசே (Monarchy) வழங்கிவந்த முற்காலத்தில், பேரறிஞரான திருவள்ளுவர் அரசியலமைப்பில் அரசனையே உடம்பாகக் கொண்டு, படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு (குறள். 381) என்று, படை குடி பொருள் அமைச்சு நட்பு அரண் ஆறையும் அவனுக்கு உறுப்பாகக் கூறினர். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/253&oldid=1431822" இலிருந்து மீள்விக்கப்பட்டது