பக்கம்:தேவநேயம் 1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரகறுப்பு பாவாணர் 237 அவர் கூறிய அரசின் இயல்வரையறை, இன்றும் பொருத்தமாயும் பொருள் பொதிந்ததாயுமிருப்பது. அவரின் பல்துறைக் கல்வியை யும் பரந்த நோக்கையும் ஆழ்ந்த எண்ணத்தையும் கூர்த்த மதியையும், காட்டப் போதிய சான்றாகின்றது. அரசுறுப்பு ஆறென்று குறளிற் கூறினும், உண்மையில் ஏழென்பதே ஆசிரியர் உள்ளக் கருத்து. தாடில்லாது குடியிருக்க முடியாததாக லின், நாட்டைக் குடியுள் அடக்கியே அரசுறுப்பு ஆறென்றார். நாடு என்பது ஒரு தனியுறுப்பாகவே, நாடு என்னுந் தலைப்புக் கொண்ட 74ஆம் அதிகாரத்தில் அவர் கூறியிருத்தல் காண்க. குடியின்றி நாடிருக்கலாம். ஆயின் நாடின்றிக் குடி இருக்க முடி யாது. இவ்வெளியவுண்மையைத் திருவள்ளுவர் அறியாதிருந் திருப்பின், திருக்குறளையே இயற்றியிருக்க முடியாது. மேலும், நாடு என்றே ஒரு தனியதிகாரம் பின்னர் வகுத்திருப்பதால், முன்னுக்குப் பின் முரணாகவும் முடியும், ஓரதிகாரம் முழுவதை யும் தலைப்புடன் கவனியாது போவதும், இயலுஞ் செயலன்று. திருவள்ளுவமாலையிற் போக்கியார் பாடல். அரசிய லையைத் தமைச்சிய லீரைந் துருவல் வரணிரண்டொன் றென்.. - ழிருவியல் திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன் றெண்பொரு ளேழா மிவை என்றே. பொதுவாக வெளியிடப்பெற்று வந்திருக்கின்றது."ஆறும் உடையான் அரசருள் ஏறு” என்று திருவள்ளுவர் எண் வரம்பிட்டுக் கூறியிருப்பதனாலும். அரண் நாட்டின் கூறாதலா லும், நாடு முழுதும் அரணமையவுங் கூடுமாதலாலும், நாட்டை அரணுள் அடக்கிப் போக்கியார் அங்ஙனம் பாடின ரென்று. பெரும்பாலர் கருதலாம். ஆயின், சேலங்கல்லூரி மேனாள் தமிழ் விரிவுரையாளர் திரு. நடேச அந்தணனார் இயற்றிய திருக்குறள் திறவு - பொருட்பால் இறைமாட்சி என்னும் அரிய ஆராய்ச்சி நூலில், போக்கியார் பாடலாக. அரசிய லையைத் தமைச்சிய லீரைந் துரைநா டரண்பொரு ளொவ்வொன் - துரைசால் படையிரண்டு நட்புப் பதினேழ்பன் மூன்று குடியெழுடான் றொக்கபொருட் கூறு என்னும் அருமையான பாடவேறுபாடே காட்டப்பட்டுள்ளது. இதுவே சரியான பாடமாக இருத்தல் வேண்டும். திருக்குறட் பதிப்புகளெல்லாவற்றிலுமுள்ள பாடத்தில், “இரு வியல்” என்னும் தனிச்சீர் இலக்கணப்படி 'ஈரியல்' என்றிருத்தல் வேண்டும். அதைச் செய்யுள் திரிபென்று கொள்ளினும், அக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/254&oldid=1431823" இலிருந்து மீள்விக்கப்பட்டது