பக்கம்:தேவநேயம் 1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

238 தேவநேயம் அரகறுப்பு கொள்கை அத்துணைச் சிறந்ததாகத் தோன்றவில்லை. ஆதலால், திரு. நடேச அந்தணனார் கொண்ட பாடத்தையே இனிப் பதிப்பிப்போரெல்லாம் மேற்கொள்வாராக. திருவள்ளுவர் கூறிய அரசுறுப்புகளுள். கூழ் (பொருள்). நட்பு என்னும் இரண்டும் மிக முதன்மையாகக் கவனிக்கத்தக்கவை. இந்தியா உலகப் பெருநாடுகளுள் ஒன்றாயிருப்பினும், தனக்குப் போதிய உணவுப் பொருளின்மையால், அமெரிக்காவிற்கும் ஏனை நாடுகட்கும் சென்று கையேந்த வேண்டியுள்ளது. சில பெரு நாடுகட்குப் போதிய உணவுப் பொருளிருப்பினும், கைத்தொழிற் கருவிப் பொருட்குப் பிறநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைமையுள்ளது. இனி, அமெரிக்காவும் இரசியாவும் எத்துணை வல்லரசுகளா யிருப்பினும், ஒன்றிய நாட்டினங்கள் (United Nations) என்னும் அமைப்பு ஏற்பட்டபின்னும், அதற்குள்ளேயே; வட அத்திலாந்திய உடன்படிக்கையமைப்பு (N.A.T.O.) என்றும், தென்கிழக்கு ஆசிய உடன்படிக்கை யமைப்பு (S.E.A.T.0.) என்றும், நடுவ உடன் படிக்கையமைப்பு (C.T.O.) என்றும். இன்னும் பிறவாறும், எத் துணையோ கூட்டு நட்புகளைத் தோற்றுவித்துக் கொண்டுள்ளன. இனி, ஆப்பிரிக்க நாடுகளும் அரபிய நாடுகளும் பிறவும் தம்முட் செய்துகொண்டிருக்கும் நட்புடன்படிக்கைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டுவதில்லை. இங்ஙனம், ஒற்றுமைக்காக ஏற்பட்ட உலகமைப்பு 'ஒன்றா நாட்டினங்கள்' (Disunited Nations) என்று சொல்லுமாறே. உலக நாடுகளின் போக்கு இருந்து வருகின்றது. திங்களையடைந்து தன் அறிவியல் (Scientific), கம்மியல் (Technological) வளர்ச்சியின் தலைத்திறத்தைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவும், எவ்வெந் நாட்டொடு எவ்வெவ்வகையில் நட்புப் பூணலாமென்று சூழ்வதிலும், சூழ்ச்சி முடிபை நிறைவேற்று வதிலுமே, கண்ணுங் கருத்துமாயிருந்து வருகின்றது. இவ் விருபதாம் நூற்றாண்டிலும், ஒரு மாபெரு வல்லரசு. வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் (குறள் 471 என்பதற்கேற்ப, தன் வாழ்விற்குத் துணைவலியை இன்றியமை யாததாகக் கருதின், ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட பழங்காலத்தில், நட்பு எத்துணைச் சிறந்த அரசுறுப்பாயிருந்திருத்தல் வேண்டு மென்பதை எண்ணிக் காண்க. இனி, ஒரு நாட்டின் நிலைமை, சூழ்நிலைக்கேற்ப அடிக்கடி மாறிக் கொண்டு வருவதால், கோன்மை என்பது நிலைத்தவுறுப்பன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/255&oldid=1431824" இலிருந்து மீள்விக்கப்பட்டது