பக்கம்:தேவநேயம் 1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரணம் பாவாணர் 239 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு (குறள் 735) என்று திருவள்ளுவர் கூறியிருப்பதால், ஒற்றுமை என்பதும் அவர்க்குத் தெரியாததன்று. இன்று மக்கள்தொகை மட்டிற்கு மிஞ்சிப் பெருகியிருப்பதாலும், தமிழம் என்பது மொழி இலக்கியம், பண்பாடு முதலியவற்றில் தனிப்பட்டதாதலாலும். எதிர்காலத் தமிழக அரசு புத்தம் புதிய முறையில் அமைதல் வேண்டும். (தமிழம்) அரண் பகைவராற் கைப்பற்றப்படாவாறும், கொள்ளையடிக்கப்படா வாறும், அழிக்கப்படாவாறும், நாட்டிற்கும் தலைநகருக்கும் அரசனுக்கும் பாதுகாப்பளிக்கும் இயற்கையும் செயற்கையுமாகிய இருவகையமைப்பு. (குறள் அதி. 75.) உரம் - அரம் - அரண் = வலிய காப்பு, காப்பான கோட்டை , காப்பான இடம். ஒ.நோ. பரம் - பரண், அரண் - அரணம் - சரண (வ.), சரண என்னும் வடசொற்குச் சார்தல் என்று பொருள்படும் சரி என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். அது சார் என்னுந் தென்சொல்லின் திரிபே. (தி.ம. 737) அரண் உறுப்புக்கள் மதில்மேலுள்ள பதணம், ஏப்புழை, சூட்டு, ஞாயில் (ஏவறை) கொத்தளம் (காவல் கோபுரம்) முதலியனவும், பகைவர்க்குத் தெரியாது நகர்க்கு வெளியே சென்றுவர நிலத்தின் கீழமைத்த சுருங்கை முதலியனவுமாம். (குறள் 749) அரண்வகை இயற்கை அரண் : காடு, மலை, ஆறு, கடல், செயற்கை அரண் : கோட்டை , அகழி. (குறள் 737) அரணம் - அரண்ய (இ.வே.) அரண் = காவற்காடு, அரண் - அரணம் = காடு, காவல்வேல் காவற் காடிவை யரணே. (பிங்) காடும் எயிலுங் கவசமும் அரணம். பிங்) "மலையரண் காட்டரண் மதிலரண் நீரரண் தவையறு சிறப்பின் நால்வகை யரணே" (திவா) பிங்) வடமொழியார் காட்டும் மூலம்: ரு(TE) = செல். ரு - அரண = தொலைவான, அயலான.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/256&oldid=1431825" இலிருந்து மீள்விக்கப்பட்டது