பக்கம்:தேவநேயம் 1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரத்தம் பாவாணர் 241 "ஒருபக லெல்லா முருத்தெழுந்து” (கலித். 39:23) (செ.குன்றாவி) வெகுளுதல், “ஒன்வாட்டானை யுருத்தெழுந் தன்று” (பு.வெ.3:2), சினத்தல் எரிதல் போன்றது. உரு - உருத்திரம் = சினம். உருத்திரம் - வ. ருத்ர (rudra), OE. wreth, OS wre#th, OHG, reid, ON. reithr, E.wrath, wroth. உருத்திரம் - உருத்திரன் = கடுஞ்சினத்தன். உருத்திரன் - வ. ருத்ர (rudra). தமிழரின் முத்தொழிலோனான சிவன் ஆரியரின் முத்திருமேனி யருள் (திரிமூர்த்திகளுள்) ஒருவனான அழிப்புத் தொழிலோனாக் கப்பட்டபின், ஆரியக் கடுங்காற்றுத் தெய்வ(stom god)மாகிய ருத்ர (உருத்திரன்) அழிப்புத் தொழிலொப்புமை பற்றிச் சிவனோடு இணைக்கப்பட்டான். ருத்ர ஆரியத் தெய்வமாயினும், வடமொழி தமிழின் திரிமொழி யாதலின், தமிழ்த் திரிசொல் லாலேயே குறிக்கப்பட்டான் என அறிக. உரு - உரும் - உருமி - உருமித்தல் = வெப்பமாதல், உரும் - உருமம் = 1. வெப்பம். (பிங்.) 2. உருமிக்கும் நண்பகல். "உருமத்திற் கதிரே” (சேதுபு. இராமனருச், 218). உருமவிடுதி (யாழ்ப்) = நண்பகல் வேலை நிறுத்தம். உருமகாலம் = கோடைக்காலம், உருமத்துக்குவிடுதல் = நண்பகலில் வேலை நிறுத்துதல். உரும் - உரும்பு = கொதிப்பு. "உரும்பில் கூற்றத்தன்ன நின்” (பதிற்றுப். 26:13). உரும்பு - உருப்பு =1. வெப்பம். “கன்மிசை யுருப்பிறக் கனைதுனி சிதறென” (கலித். 16:7), 2. சினத்தீ. "உருப்பற நிரப்பினை யாதலின்" (பதிற்றுப். 50:16), 3. கொடுமை. “உருப்பில் சுற்றமோடிருந்தோற் குறுகி” (பெரும்பாண். 417). உருப்பு - உருப்பம் = 1, வெப்பம். "கனலும் -- வந்து குடி கொண் டவணுறைந்தன வுருப்பமெழ” (அரிச். பு. விவா.104) 2. சினம். (W.). உரும்பு - உரும்பரம் = 1. செம்பு, 2. பெருங்காயம். உரும்பரம் - வ. உதும்பர = செம்பு, உரு - உருகு. உருகுதல் = 1. வெப்பத்தால் இளகுதல். 2. மன நெகிழ்தல், “பூண்முலையார் மனமுருக” (பு. வெ. 9:11, கொளு), 3, மெலிதல். தாயிறந்தபின் உருகிப் போனாள். ம. உருகு. உருகு - உருக்கு, உருக்குதல் = 1. மாழை யிளகச்செய்தல், “தீயிடை யுருக்குதல் முயன்றான்” (கந்தபு. மார்க்க, 131), 2. மன நெகிழச் செய்தல். "எம்பிரா னாமஞ் சொல்லி யுருக்கினன்” (கம்பரா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/258&oldid=1431827" இலிருந்து மீள்விக்கப்பட்டது