பக்கம்:தேவநேயம் 1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

242 தேவநேயம் அரத்தம் உருக்காட். 27}, 3. மெலியச் செய்தல். அவனை நோய் உருக்கி விட்டது. 4. அழித்தல். 5. வருத்துதல். ம. உருக்கு உருக்கு = 1. எஃகு. (சூடா.), 2. உருக்கின பொருள். “செப்புருக் கனைய (கம்பரா. கார்கா. 91). ம. உருக்கு, க. உர்க்கு , தெ. உக்கு. உருக்கு - உருக்கம் = 1. மனநெகிழ்ச்சி, இளக்கம். 2. இரக்கம். "உருக்கமி லவ்வசுரக்குலம்" (இரகு. மாலையி. 113).3, தெய்வப் பத்தி, "உருக்கத்திற் கரத்தேந்தி" (விநாயகபு, 75:121) ம. உருக்கம். உருக்கு - உருக்கன் = மேனியை வாட்டும் நோய், (யாழ்ப்). உல் - உள் - ஒள் = 1. ஒளியுள்ள. 2. அழகான. 3. நல்ல. 4. அறிவுள்ள. ஒண்மை =1. விளக்கம். "ஒப்பின் மாநக ரொண்மை ” (சீவக. 535), 2. இயற்கை யழகு, "ஒண்மையு நிறையு மோங்கிய வொளியும்" (பெருங். உஞ்சைக், 31:151), 3. நன்மை . (பிங்). 4. நல்லறிவு. "ஒண்மை யுடையம் யாம்” (குறள், 844), 5. மிகுதி. (திவா.) 6. ஒழுங்கு (சூடா.), ஒள் - ஒள்ளியன் = 1, அறிவுடையோன். “ஒளியார் முன் ஒள்ளிய ராதல்” (குறள், 714) 2. நல்லவன். "நடக்கையில் ஒள்ளிய னல்லான்மேல் வைத்தல்” (பழ. 255). க. ஒள்ளித. ஒள் - ஒளி = 1. நெருப்பு, 2. எரிக்குந் தன்மை 3. விளக்கு. 4. காந்தி, 5. கதிரவன், 6, வெயில். 7. திங்கள். 8. நாண்மீ ன். 9. மின்ன ல், 10, கட்புலன், 11. கண்ம ணி. 12. பெருமை. 13. புகழ். 14. அரசனது கடவுட்டன்மை . 15. அறிவு. 16. நன்மை . 17. செயற்கை யழகு. ம. ஒளி. க. ஔ. ஒளி - ஒளிர். ஒளிர்தல் = விளங்குதல், “உள்ளத்து ளொளிர்கின்ற வொளியே” (திருவாச. 37:5). உள் - உண் - உண்ணம் = நெருப்பு, வெப்பம். “உண்ண வண்ணத் தொளிர் நஞ்ச முண்டு” (தேவா. 510:5). உண்ணம் - வ. உஷ்ண, மரா. ஊன்பாணி = வெந்நீர். உண் - உண, உணத்தல் = காய்தல், புலர்தல், உண - உணத்து (பி.வி), உணத்துதல் = 1, காய வைத்தல், நெல்லை யுணத்தினாள். 2, ஈரம் புலர்த்துதல், தலையை யுணத்து, 3. வற்ற லாக்குதல், வற்றுவித்தல், "மெய்யுணத்தலும்” (தைலவ. தைல. 140), உண - உணங்கு. உணங்குதல் = 1. உலர்தல். “தினை விளைத்தார் முற்றந் தினையுணங்கும்" (தமிழ்நா . 154), 2. மெலிதல். "ஊடலு ணங்க விடுவாரோடு” (குறள். 1310). 3. மனம் வாடுதல். "உணங்கிய சிந்தையீர்” (கந்தபு, மோன. 21), 4. சுருங்குதல். “உணங்கரும் புகழ்” (காஞ்சிப்பு, நாட்டுப். 1), 5. செயலறுதல். "உணங்கிடுங் கரண மென்னில்” (சி.சி.4:7),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/259&oldid=1431828" இலிருந்து மீள்விக்கப்பட்டது