பக்கம்:தேவநேயம் 1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரத்தம் பாவாணர் 243 க. ஒணகு. உணங்கு - உணக்கு (பி.வி.) உணக்குதல் = 1. உலர்த்துதல். “தொடிப் புழுதி கஃசா வுணக்கின்” (குறள். 1037). 2. கெடுதல். “உணக்கினான் - என் வாழ்க்கை ” (விநாயகபு. 80: 120). ம. உணக்கு, உணங்கு - உணங்கல் = 1, உலர்த்திய தவசம். "உணங்கல் கெடக்கழுதை யுதட்டாட்டங்கண் டென்பயன்” (திவ். திருவாய், 4:6; 7), 2. வற்றல், "வெள்ளென் புணங்கலும்" (மணி. 16:67), 3. சமைத்த வுணவு. "ஓடுகை யேந்தி - உணங்கல் கவர்வார்” (தேவா, 1030:3) , 4. உலர்ந்த பூ (பிங்.), உணக்கு - உணக்கம் = வாட்டம். (W.). ம. உணக்கம், க. ஓணகிலு (g), து. ஒணகெலு. உள் - அள் - அழு - அழல் =1.நெருப்பு.2.வெப்பம். 3. ஒளிவிளக்கம். 4. துளங்கொளி (கேட்டை ), 5. செவ்வாய். 6. நரகம். 7. காந்தல், உடம்பெரிவு, 8, எருக்கு. 9. தஞ்சு. 10 உறைப்பு. 11. சினம். ம. அழல், அழல்தல் = 1, எரிதல். 2. விளங்குதல், நிகழ்தல், 3. காந்துதல், 4. உறைப்பாதல், 5. சினத்தல். 6. பொறாமைப்படுதல், அழல் வண்ண ன் = சிவன் (தேவா, 1055:5). அழல்விதை = நேர்வாள வித்து. (மலை). அழல் விரியன் = எரிவிரியன். (W.). அழல் விழித்தல் = சினத்தல். (திருவாலவா. 14:5). அழலவன் = 1, நெருப்புத் தேவன். 2. கதிரவன் 3. செவ்வாய், அழல் - அழலி = நெருப்பு. (பிங்.). அழலி - அழலிக்கை = எரிச்சல். அழல் - அழலை = தொண்டை யெரிச்சல். அழலோன் = 1, நெருப்புத்தேவன். 2. கதிரவன் 3. செவ்வாய். அழற்காய் = மிளகு, அழற்குட்டம் = நளி (கார்த்திகை) அழற்குத்துதல் = மணம் உறைத்தல். அழல் - அழற்சி = 1. எரிவு. 2. கால்நடைச் சுரநோய். 3. உறைப்பு 4. சினம். 5. அழுக்காறு. அழல் - அழற்று (பி.வி.) அழற்றுதல் = 1. எரியச் செய்தல். 2.வெம்மை செய்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/260&oldid=1431829" இலிருந்து மீள்விக்கப்பட்டது