பக்கம்:தேவநேயம் 1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2441 தேவநேயம் அரத்தம் அழற்று - அழற்றி - அழற்றியன் - அழத்தியன் = பெருங்காயம். அழல் - அழன் - அழனம் = 1. தீ. (பிங்.), 2 வெம்மை . (பிங்.). அழு - அகு - அகுட்டம் = எரியும் மிளகு. (W.). ழ -க, போலித்திரிபு. ஒ.நோ. மழவு - மகவு, தொழுதி - தொகுதி, முழை - முகை. அகு - அகை. அகைதல் = எரிதல், "அகையெரி யானாது” (கலித். 139:26), அகு - அக்கு - அக்கி = 1. நெருப்பு, தீ. "அக்கிவாய் மடுத்தவேடு” (திருவிளை. சமண. 38). 2. நெருப்புத்தேவன்." அக்கியுங் கரமிழந்து" (சிவதரு. சனன. 51), 3. சூட்டினாலுண்டாகுந்தோல் நோய் (herpes). ம., தெ. அக்கி. பிரா. அக்கி (aggi).| அக்கு - இ.ஆக் (afg) =b, அகி - அவி. ஒ.நோ. குழை - குகை - குவை. வ - க திரிபின் தலைமாற்று க - வ, அவிதல் = புழுங்குதல், வேதல், சமைதல், அழிதல், அணைதல், ஒடுங்குதல், ஓய்தல், பணிதல். அவி - அவிர். அவிர்தல் = விளங்குதல், அழு - அழுங்கு, அழுங்குதல் = வேதல், புழுங்குதல், வருந்துதல், பொறாமைப்படுதல். அழுங்கு - அழுக்கு - அழுக்குறு, அழுக்குறுதல் = பொறாமைப் படுதல், அழலி - அழனி - அகனி - வ. அக்நி. (agni) - L. ignis, Lith. xgnis, Russ. ogone, Slav. ognj. "From what root is Agni derived? He is the foremost leader, he is led foremost in sacrifices, he makes every things, to which it inclines, a part of himself. He is a drying agent' says Stha#ulaset@hivi, it does not make wel, it does not moisten. 'It is derived from three verbs', says Sakarpuni, from going from shining or burning, and from leading.' He, indeed, takes the letter a from the rooti (to go), the letter g from the root atj (toshine), or dah (to burn) with the root (ni) (to lead) as the last member." Top லண்ம ன் சரூப் எழுதிய The Nighantu & the Ninukta என்னும் நூலில் 120 ஆம் பக்கத்திற் கூறப்பட்டுள்ளது. அறிஞர் இதன் பொருத் தத்தைக் கண்டுகொள்க. இனி, அக்நி என்னும் வட சொற்கு, agra, foremost என்பது மூலமென்றும், ago, to lead என்பது மூலமென்றும் ag, to go என்பது மூலமென்றும், உரைப்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/261&oldid=1431830" இலிருந்து மீள்விக்கப்பட்டது