பக்கம்:தேவநேயம் 1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரத்தம் பாவாணர் 245 அக்கினியைத் தேவருள் முந்தினவனென்று வேத ஆரியர் கொண் டாலும், அக்கினியென்னுஞ் சொல்லிற்கு அக்கிரம் என்னுஞ் சொல்லொடு தொடர்பில்லை. அக்கு (ak) = கூர்மை, நுனி. அக்கு. - அக்கிரம் (Gk. acros) = நுனி, உச்சி. அக்கிரம் (Skt. agra) = நுனி, முதன்மை, தலைமை. அகை (ago) என்னும் சொல் உகை என்பதன் திரிபு. செல்லுதலைக் குறிக்கும் ag என்னும் சொல் பொருளளவில் ஒரு சிறிதும் பொருந்தாது. உல் - அல் - அன் - அன்று. அன்றுதல் = சினத்தல். அன் - அனல் = 1. தீ. 2. வெப்பம். 3. இடி அனல்தல் = அழலுதல், அனல் - அனலம் = நெருப்பு. அனலம் - வ. அனல. இது சென்னைப் ப.க.த. அகர முதலியில் தலைகீழாகக் காட்டப் பட்டுள்ளது. அனல் - அனலி = 1. நெருப்பு. 2. கதிரவன். அனல் - அனலன் = நெருப்புத் தேவன். அனல் - அனற்று (பி.வி.), அனற்றுதல் = (செ.கு.வி) நோய்நிலையில் முனங்குதல், (செ. குன்றாவி.) 1. எரித்தல், 2. வெப்பமாக்குதல், 3. வயிறுளையச் செய்தல். 4. சினத்தல். அல் - அலத்து - அலத்தி = மின்மினி (சது.). அலத்து - அலத்தம் = செம்பருத்தி. (மலை.). அலத்தம் - வ. அலக்த. அலத்தம்-அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு. அலத்தகம் - வ. அலக்தக. அலத்து - அலத்தல் - அலந்தல் = செங்கத்தரி. அல் - அர் - அரம் = சிவப்பு. அரன் = சிவன் - வ. ஹர. ஆரியர் சிவனை அழிப்புத் திருமேனியாக்கினதினால், ஹர என்னும் வடசொல்லிற்கு அழிப்பவன் என்று பொருள் கூறுவர். அர் - அரக்கு = 1 சிவப்பு, (திவா.), 2. ஒரு செஞ்சரக்கு (சாதிலிங்கம்) 3. செம்மெழுகு. ம. அரக்கு, க., து. அரகு (g). வ. ராக்ஷா . (செம்மெழுகு). அரக்காம்பல் = செவ்வாம்பல். (பிங்.). அரக்கு - அரக்கம் = 1. அரத்தம் 2. அவலரக்கு. அரக்கம் (அரத்தம்) - வ. ரக்த. அரக்கம் (அவலரக்கு) - வ. ராக்ஷா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/262&oldid=1431832" இலிருந்து மீள்விக்கப்பட்டது